”நடிகருனு சொல்லாம, நண்பர்னு சொன்னதே...” பாராட்டிய ரஜினி; நெகிழ்ந்த சசிக்குமார்

அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
”நடிகருனு சொல்லாம, நண்பர்னு சொன்னதே...” பாராட்டிய ரஜினி; நெகிழ்ந்த சசிக்குமார்
”நடிகருனு சொல்லாம, நண்பர்னு சொன்னதே...” பாராட்டிய ரஜினி; நெகிழ்ந்த சசிக்குமார்Twitter
Published on

மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'அயோத்தி'.

இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' பிரபல புகழ், ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடித்திருந்தனர்.

மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. விமர்சன ரீதியாக பலரும் படத்தை பாராட்டி இருந்தனர்.

அந்த வகையில் அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ”அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!” என்று பாராட்டியுள்ளார்.

”நடிகருனு சொல்லாம, நண்பர்னு சொன்னதே...” பாராட்டிய ரஜினி; நெகிழ்ந்த சசிக்குமார்
விடுதலை படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி - என்ன சொன்னார் தெரியுமா?

இதற்கு சசிகுமார், "நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது. மிக்க நன்றி சார்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

”நடிகருனு சொல்லாம, நண்பர்னு சொன்னதே...” பாராட்டிய ரஜினி; நெகிழ்ந்த சசிக்குமார்
உலக உணவு தினம்: விஜய் முதல் ரஜினி வரை நம் நட்சத்திரங்களின் விருப்ப உணவு எது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com