ரஜினி : திருவண்ணாமலையில் சாமி தரிசன புகைப்படத்துக்கு இந்து முன்னணி கண்டனம் - என்ன காரணம்?

அண்ணாமலையார் கோயிலில் உள்ள அம்மன் சன்னதியில் தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு, சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி : திருவண்ணாமலையில் சாமி தரிசன புகைப்படத்துக்கு இந்து முன்னணி கண்டனம் - என்ன காரணம்?
ரஜினி : திருவண்ணாமலையில் சாமி தரிசன புகைப்படத்துக்கு இந்து முன்னணி கண்டனம் - என்ன காரணம்?Twitter

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்தின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இயக்குநர் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதற்காக திருவண்ணாமலை சென்ற ரஜினிகாந்த் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சென்ற ரஜினியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

அண்ணாமலையார் கோயிலில் உள்ள அம்மன் சன்னதியில் தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு, சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மூலவர் மற்றும் அம்மன் கருவறை முன்பு புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதியில்லை. இதற்காக சுவாமி கருவறை முன்பு கோயில் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் இருப்பார்கள்.

அப்படிபட்ட சூழலில் அம்மன் கருவறை முன்பு நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்வது புகைப்படமாக வெளியானது பேசு பொருளாகியுள்ளது.

ரஜினி : திருவண்ணாமலையில் சாமி தரிசன புகைப்படத்துக்கு இந்து முன்னணி கண்டனம் - என்ன காரணம்?
ரஜினி - கமல் : நேரடியாக மோதிக் கொண்ட படங்கள் - வென்றது யார்? | முழுமையான தகவல்

இதற்கு இந்து முன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட பொதுச் செயலாளர் இரா.அருண்குமார் கூறும்போது, ”கடவுள் முன்பு அனைவரும் சமம். கருவறை முன்பு புகைப்படம் எடுக்க யாருக்கும் அனுமதியில்லை.

கருவறை முன்பு புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. புகைப்படம் எடுத்தவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்” என்றார்.

ரஜினி : திருவண்ணாமலையில் சாமி தரிசன புகைப்படத்துக்கு இந்து முன்னணி கண்டனம் - என்ன காரணம்?
உலக உணவு தினம்: விஜய் முதல் ரஜினி வரை நம் நட்சத்திரங்களின் விருப்ப உணவு எது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com