ரஜினி - கமல் : நேரடியாக மோதிக் கொண்ட படங்கள் - வென்றது யார்? | முழுமையான தகவல்

தல - தளபதி ரசிகர்கள் போட்டிக்கு முன் தமிழகத்தை திக் திக் மூடில் வைத்திருந்தது ரஜினி - கமல் Fan Wars தான். ஆரம்ப காலத்தில் இவர்கள் இணைந்து நடித்திருந்தாலும் தனித்தனியாகப் படங்கள் ரிலீசாகும் போது பலமான போட்டியாகவே இருக்கும்.
கமல் - ரஜினி
கமல் - ரஜினிTwitter
Published on

திரைத்துறையில் நடிகர்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தாலும் ரசிகர்களுக்கு இடையிலான சண்டை மட்டும் ஓய்வதேயில்லை. இந்த மோதல்கள் இருவரின் படமும் ஒரே நேரத்தில் வெளியாகும் போது பெரும் உச்சத்தை அடையும். அதில் வெற்றி பெறாத நாயகனின் ரசிகர்கள் கேலி செய்யப்படுவார்கள். இது மோசமான ஒன்றாக இருப்பினும் இன்றுவரை சினிமா உலகில் தவிர்க்க முடியாததாக உள்ளது.

தல - தளபதி ரசிகர்கள் போட்டிக்கு முன் தமிழகத்தை திக் திக் மூடில் வைத்திருந்தது ரஜினி - கமல் போட்டி தான். இவர்கள் இணைந்து சில படங்களில் நடித்திருந்தாலும் தனித்தனியாகப் படங்கள் ரிலீசாகும் போது பலமான போட்டியாகவே இருக்கும். இதுவரை பல முறை ரஜினி - கமல் படங்கள் ஒன்றாக வெளிவந்திருக்கின்றன. அந்த படங்களில் எவை வெற்றி பெற்றன எவைத் தோல்வியுற்றன என்பதைக் காணலாம்.

தங்கமகன் – தூங்காதே தம்பி தூங்காதே
தங்கமகன் – தூங்காதே தம்பி தூங்காதே Twitter

தங்கமகன் – தூங்காதே தம்பி தூங்காதே (1983)

ரஜினி, கமல் மோதலுக்குப் பிள்ளையார் சுழி போட்டது இந்த படங்கள் தான். படங்களும் சரி ரசிகர்களும் சரி இந்த பெரும் ஆளுமைகளை விட்டுக்கொடுக்கவில்லை. ரஜினிக்கு ஜோடியாகப் பூர்ணிமாவும், கமலுக்கு ஜோடியாக ராதா மற்றும் சுலக்ஷனாவும் நடித்திருந்தனர். இரண்டு படங்களுமே 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

நல்லவனுக்கு நல்லவன் – எனக்குள் ஒருவன் (1984)

நல்லவனுக்கு நல்லவன்
நல்லவனுக்கு நல்லவன்Twitter

ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் உழைத்து முன்னேரும் ரஜினி, அவரது மகளுடனான பாசப்போராட்டம் என 80ஸ் ரசிகர்களுக்கு விருந்தாக வந்தமைந்தது. எஸ்பி முத்துராமன் இயக்கிய இந்த திரைப்படம் 150 நாட்களுக்கும் மேல் ஓடி வசூல் சாதமையும் படைத்தது. வழக்கம் போல இளையராஜாவின் இசை படத்துக்குப் பக்க பலமாக அமைந்தது.

எனக்குள் ஒருவன்
எனக்குள் ஒருவன்Twitter

கமலின் எனக்குள் ஒருவன் திரைப்படம் ஒரு கமலின் உடம்பிற்குள் இன்னொரு கமல் புகுந்து கொள்வது போன்று அமைக்க பட்ட கதையும், கராத்தே சண்டையும் மக்களுக்குப் புதிதாக இருந்தது. இதனால் மக்களை வெகுவாக கவரத் தவறியது இந்த படம். ஆனாலும் பாடல்கள் பட்டிதொட்டி வரை சென்று சேர, படம் நார்மலான ஹிட்.

நான் சிகப்பு மனிதன் – காக்கி சட்டை (1985)

நான் சிகப்பு மனிதன்
நான் சிகப்பு மனிதன்Twitter

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர் ஹிந்தியிலிருந்து ரீமேக் செய்த திரைப்படம் நான் சிகப்பு மனிதன். ரஜினியின் தங்கையை பாலியல்வண்புணர்வு செய்தவர், தாயின் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பலிவாங்கும் கதை பெரும் வெற்றி பெற்றது.

காக்கி சட்டை
காக்கி சட்டை Twitter

ராஜசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியானது இந்தத் திரைப்படம். போலீசில் சேரவேண்டும் என்று தயார் படுத்திக்கொண்டு இருக்கும் நாயகன், அண்டர் கவர் பெயரில் வில்லன் உடன் பயணிப்பது போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படம். பாடல்கள் எல்லாம் மாபெரும் வெற்றி. படம் 200 நாட்களுக்கும் மேல் வெற்றியடை போட்டது.

படிக்காதவன் – ஜப்பானில் கல்யாணராமன் (1985)

படிக்காதவன்
படிக்காதவன்Twitter

படிக்காதவன் படத்தின் வெற்றி குறித்து நாம் தனியாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ரஜினி, அம்பிகா, சிவாஜி, நாகேஷ், மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார். இதில் சிவாஜி கனேசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். ரம்யா கிருஷ்ணனும் இந்த படத்தில் நடித்திருப்பார். 250 நாட்கள் ஓடிய இந்த படத்தில் ஒரு கூட்டுக் கிளியாக நம் பிளே லிஸ்டில் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜப்பானில் கல்யாணராமன்
ஜப்பானில் கல்யாணராமன்Twitter

கல்யாணராமன் படத்தின் சீக்குவலாக வந்தது இந்தப் படம். கல்யாண ராமனின் ஆவி கதைக்குள் வருவது, ஜப்பான் காட்சிகள் என புதுமையாகவும் மக்களை மகிழ்விக்கும் விதமாகவும் அந்த படம் அமைந்தது. பாடல்கள் எல்லாம் வெற்றி பெற்றன. கவுண்டமணி, கோவை சரளா நகைச்சுவையும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததால் மாபெரும் வெற்றி பெற்றது கல்யாணராமன் திரைப்படம்.

மாவீரன் – புன்னகை மன்னன் (1986)

மாவீரன்
மாவீரன்Twitter

மார்ட் என்ற அமிதாப்பட்சனின் இந்தி திரைப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்திருந்தார் ராஜசேகர். ரஜினிகாந்த், அம்பிகா, ஜெய்ஷ்ங்கர் மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்துக்கு இளையராஜா தான் இசை. பீரியட் படமான இது வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் நடப்பது போன்ற கதையம்சத்தை உடையது. வட இந்தியாவில் வெற்றி பெற்ற அக்கதை அளவு இங்கு வெற்றி பெறவில்லை.

புன்னகை மன்னன்
புன்னகை மன்னன்Twitter

மறுபக்கம் புன்னகை மன்னனுக்கு உலகத்தரமான இசையை வழங்கியிருந்தார் இளையராஜா. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், என்ன சத்தம் இந்த நேரம், தீம் மீயூசிக் எல்லாம் இப்போதும் நம் பிளே லிஸ்ட்களை ஆட்டிப்படைப்பதை மறுக்க முடியாது. கமல்ஹாசனின் குருநாதர் கே.பி இயக்க கமல் நடித்திருந்தார். ஒரு காதல் தோல்விக்குப் பிறகு அடுத்த தோல்வி என 80ஸின் பிரேமம் புன்னகை மன்னன் பெருவெற்றி பெற்றது.

கமல் - ரஜினி
Vikram Movie Review: விக்ரம் திரைப்பட விமர்சனம்

மனிதன் - நாயகன் (1987)

மனிதன்
மனிதன் Twitter

ஏவிஎம் நிறுவனத்திற்காக, எஸ்.பி.முத்துராமன் இயக்க ரஜினிகாந்த், ரூபிணி நடித்திருந்த திரைப்படம் மனிதன். சில உரசல்களால் இளையராஜா இந்த படத்துக்கு இசையமைக்கவில்லை. ரஜினியின் மாபெரும் ரசிகர் கூட்டத்தினால் இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றது. 175 நாள் காட்சிகளாக பல தெட்டேர்களில் வெற்றிவாகை சூடியது.

நாயகன்
நாயகன் Twitter

நாயகன் படம் கமலின் வித்தியாசமான முயற்ச்சியாக பார்க்கப்பட்டது. மணிரத்னம் இயக்கிய இந்த படம் இன்று வரை ரசிகர்களால் பேசப்படுகிறது என்பதை நாம் அறிவோம். இந்த படம் வெளியாகும் போதே ஒரு பிரச்னையை சந்தித்தது. இதற்கு சென்சார் அனுமதி தர மறுத்தது. பின்னர் வரதராஜ முதலியாரின் வாழ்க்கை வரலாறு அல்ல எனக் கையெழுத்திடப்பட்ட கடிதம் காண்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இளையராஜா, பி.சி.ஶ்ரீராம் என உலகத்தரம் வாய்ந்த கூட்டணியின் உதவியுடன் இந்தப்படம் 175 நாட்கள் கடந்து ஓடி சாதனைப் படைத்தது.

மாப்பிள்ளை - வெற்றிவிழா (1989)

மாப்பிள்ளை
மாப்பிள்ளை Twitter

ரஜினி, அமலா, ஸ்ரீவித்யா போன்றவர்கள் நடிப்பில், ராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த படம் மாப்பிள்ளை. அப்போது போட்டியாக வெளியாகியிருந்த வெற்றி விழாத் திரைப்படம் 100 நாட்கள் ஓடிய போதும் ரஜினியின் மாப்பிள்ளை 200 நாட்களைக் கடந்து சாதனைப் படைத்தது.

வெற்றிவிழா
வெற்றிவிழாTwitter

கமல், பிரபு, அமலா நடிப்பில் வெளியான திரைப்படம் 'வெற்றிவிழா'. பிரதாப் போத்தன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். 175 நாள்கள் திரையரங்கில் ஓடி இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இது ஓர் ஆங்கில புத்தகத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது என போத்தான் ஒரு உரையாடலில் கூறியிருப்பார்.

பணக்காரன் - இந்திரன் சந்திரன் (1990)

பணக்காரன்
பணக்காரன் Twitter

1990 பொங்கல் அன்று ரஜினிக்கு லாவாரிஸ் என்ற இந்திப்படம் பணக்காரன் என தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தில் கௌதமி ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பார். ரஜினியும், பி.வாசுவும் இணைந்த முதல் படம் இது. ஏழையாக குடிகார வளர்ப்பு தந்தையிடம் வளரும் ரஜினி, ஒருகட்டத்தில் தன் நிஜ தந்தையிடமே அப்பா என தெரியாமலே வேலைக்கு சேருகிறார். பெரும் பணக்காரர் ஆன அவரது உயிருக்கு மற்றொரு மகன், உறவுகளால் ஆபத்து வர, இந்த சதியை எப்படி முடியடித்தார் என்பதுடன் ரஜினி இறுதியில் தன் தாய் - தந்தை குறித்து அடையாளம் காண்பது தான், கதைக்களம். இந்த படத்தில் வந்த 'நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்...' கல்யாண வீடுகளின் ட்ரேட் மார்க் சாங் ஆனது.

இந்திரன் சந்திரன்
இந்திரன் சந்திரன் Twitter

கமல், விஜயசாந்தி நடிப்பில் உருவான தெலுங்கு திரைப்படத்தின் டப்பிங் தான் இந்த திரைப்படம். இதில் கமல் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். இந்த படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களுக்கும் இரண்டு குரல்களில் பாடி பாராட்டுகளைப் பெற்றார் எஸ்பிபி. இந்த படம் 100 நாட்களைக் கடந்தாலும் சுமாராகவே ஓடியது.

தளபதி - குணா (1991)

தளபதி
தளபதி Twitter

தளபதியில் ரஜினியுடன் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் நாயகன் போன்றே மும்பை தாதாக்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இளையராஜாவின் இசையில் இந்த படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆனது.

குணா
குணா Twitter

குணா படத்தில் தனது நடிப்புத் திறமையை முழு வீச்சில் வெளிப்படுத்தியிருப்பார் கமல். ஆனாலும் அப்போது அது பாராட்டுகளைப் பெறத்தவறியது. "கண்மணி அன்போடு காதலன் பாடல்" மெகா ஹிட் ஆனாலும் இன்று நாம் பேசும் அளவுக்குக் கூட அக்காலகட்டத்தில் குணா திரைப்படம் பேசப்படவில்லை.

பாண்டியன் - தேவர் மகன் (1992)

பாண்டியன்
பாண்டியன் Twitter

பம்பாய் தாதா எனும் கன்னட படத்தின் ரீமேக் பாண்டியன். இது ஒரு அதிரடி படம் ஆகும். இது தமிழ் இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கியது. இதில் ரஜினிகாந்த், குஷ்பூ, ஜனகராஜ், ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா மற்றும் அவரது மகன் கார்த்திக் ராஜா இசையமைத்தனர். எனினும் படம் சுமாராகவே ஓடியது.

தேவர் மகன்
தேவர் மகன்Twitter

தேவர் மகன் திரைப்படம் கமலின் சினிமா வாழ்வில் முக்கியமான ஒன்று. 150 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. கமல், கௌதமி, ரேவதி, நாசருடன் நடிகர் திலகம் சிவாஜிகனேசன் இந்த படத்துக்கு பக்க பலமாக இருந்தார். இளையராஜாவின் இசை அபாரம். இந்த படத்தின் ஸ்கிரீன் பிளே மொத்தமாக 7 நாட்களில் கமல்ஹாசன் எழுதி முடித்தார் எனவும் கூறுவர். இந்த படத்துக்காக சிவாஜிகனேசனுக்கு தேசிய விருது கிடைத்தது.

பாட்ஷா - சதிலீலாவதி (1995)

பாட்ஷா
பாட்ஷா Twitter

பாட்ஷா ஒரு கிளாஸ் அண்ட் மாஸ் திரைப்படம் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். மாணிக்கமோ பாட்ஷாவோ எப்போது ரஜினியின் ஸ்டையில் திரையில் மிரட்டியது. 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது பாட்ஷா. ரஜினியின் திரை வாழ்வில் பாட்ஷா மிக முக்கியமான திரைப்படம்.

சதிலீலாவதி
சதிலீலாவதிTwitter

சதிலீலாவதி குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிப்படமாகவே இருந்தாலும் பாட்ஷாவுடன் போட்டிப் போடவில்லை. பலுமகேந்திரா இயக்கிய இந்த திரைப்படத்தில் கமல், ரமேஷ் அரவிந்த், கல்பனா, கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு அனந்து, கதை எழுதினார். பாலு மகேந்திராவும், கமலும் இணைந்து, திரைக்கதை அமைத்தனர். கிரேஸி மோகன் வசனம் எழுதினார். எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம் என, மூன்றையும் ஏற்றார், பாலு மகேந்திரா.

முத்து - குருதிப்புனல் (1995)

முத்து
முத்து Twitter

இன்றும் தொலைக்காட்ட்சி முன் நம்மை 3 மணி நேரம் உட்காரவைக்கக் கூடியத் திரைப்படம் முத்து. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் ஆன இந்த திரைப்படம் புதிய ரசிகர்களை ரஜினியிடம் கொண்டு வந்து சேர்த்தது.

குருதிப்புனல்
குருதிப்புனல் Twitter

மறுபக்கம் பி.சி.ஶ்ரீராம் இயக்கிய குருதிப்புனல் திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியில் இந்த திரைப்படம் பாராட்டப்பட்டாலும் பொது மக்களுடன் ஒட்டாத ஒன்றாகவே திரைக்கதை பயணித்தது. இதனால் கமல்ஹாசன் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்த இந்த திரைப்படம் தோல்வியைத் தழுவியது. சென்னையில் மட்டுமே ஓரளவு ஓடியது.

சந்திரமுகி - மும்பை எக்ஸ்பிரஸ் (2005)

சந்திரமுகி
சந்திரமுகிTwitter

சந்திரமுகி பி.வாசு இயக்கிய இந்த திரைப்படத்தின் வெற்றி குறித்து சொல்லவேத் தேவையில்லை. சென்னையில் 700 நாட்களுக்கும் மேலாக ஓடியது சந்திரமுகி. ரஜினியுன் இன்றைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடித்திருந்தார். வடிவேலு - ரஜினியின் காமடிகள் படத்துக்கு பக்கபலமாக இருந்தது.

மும்பை எக்ஸ்பிரஸ்
மும்பை எக்ஸ்பிரஸ்Twitter

கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படுதோல்வி அடைந்தது. சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல், பசுபதி, மனிஷா கொய்ராலா, நாசர், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியானது. ஆனால் இப்போது வெளியானால் கூட நல்ல வரவேற்பைப் பெறக்கூடிய தரமான பிளாக் காமடி படம் என்கிறார்கள் ரசிகர்கள்.

கமல் - ரஜினி
விக்ரம் : லோகேஷ் கனகராஜுக்கு கமல் பரிசளித்த Lexus கார் குறித்த 10 தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com