டிவிட்டரில் ட்ரெண்டாகும் #BoycottZeenews - ஷாருக் கான் ரசிகர்கள் கோவத்துக்கு காரணம் என்ன?

இந்த #Boycott கலாச்சாரம் குறித்து பல நட்சத்திரங்களும் வேதனையுடன் பேசி வருகின்றனர். இந்த நிலையில் பாலிவுட் ரசிகர்கள் ஜீ நியூஸை புறக்கணிக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றனர்.
Shah Rukh Khan
Shah Rukh KhanTwitter
Published on

பாலிவுட் சூப்பர் ஸ்டரான ஷாருக் கான் ரசிகர்கள் முன்னணி ஊடக நிறுவனமான ஜீயின் ஜீ நியூஸை புறக்கணிக்க வேண்டும் என ட்வீட் செய்து வருகின்றனர்.

Darlings, Lal singh Chaddha, Brahmastra என அடுத்தடுத்து வெளியான பாலிவுட் படங்கள் வரிசையாக புறக்கணிக்கப்பட வேண்டுமென டிவிட்டரில் நெட்டிசன்களளால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இந்த #Boycott கலாச்சாரம் குறித்து பல நட்சத்திரங்களும் வேதனையுடன் பேசி வருகின்றனர். இந்த நிலையில் பாலிவுட் ரசிகர்கள் ஜீ நியூஸை புறக்கணிக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றனர்.

ஜீ நியூஸ் பிரதிநிதியாக இருக்கும் ஊடகவியலாளர் அனுஜ் குமார் பாஜ்பாய் தனது டிவிட்டரில் ஷாருக் கானின் 'பதான்' திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து ஒரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷாருக் கானின் ரசிகர்கள் #BoycottZeenews என்ற ஹேஷ்டேகில் ஜீ நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்வீட் செய்து வருகின்றனர்.

ஷாருக் கான் தனது குடும்பத்தினருடன் தேசிய கொடி ஏற்றிய புகைப்படத்துடன் அனுஜ் குமார் பாஜ்பாய் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். பின்னர் தான் பதிவிட்ட ட்வீட்டை அவரே நீக்கியிருக்கிறார். எனினும் ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு எதிராக ட்வீட் செய்து வருகின்றனர்.

இந்த சர்ச்சையின் காரணமாக டிவிட்டர், அனுஜ் குமாரின் வெரிஃபைட் நீள நிற டிக்கை நீக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Shah Rukh Khan
30 Years of Shah Rukh Khan: 30 Must Watch Movies of Bollywood Superstar
Shah Rukh Khan
சுதந்திரப் போராட்ட வீரர்கள் : நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய 7 திரைப்படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com