Romeo Juliet: 16 வயதில் நிர்வாண காட்சி - 55 ஆண்டுகளுக்கு பின் வழக்கு தொடுத்த நடிகர்கள்

திரைப்படம் வெளியாகி 55 ஆண்டுகள் ஆகும் நிலையில் அந்த திரைப்படத்தில் தங்களை ஏமாற்றி நிர்வாணக் காட்சியில் நடிக்க வைத்ததாக ஒலிவியா மற்றும் லியோனர்ட் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரோமியோ ஜூலியட் : நிர்வாண காட்சியில் நடித்த குழந்தை நட்சதிரங்கள்- 70 வயதில் வழக்கு தொடுப்பு
ரோமியோ ஜூலியட் : நிர்வாண காட்சியில் நடித்த குழந்தை நட்சதிரங்கள்- 70 வயதில் வழக்கு தொடுப்புRomeo and Juliet
Published on

ஆங்கில இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் எழுதிய 'ரோமியோ ஜூலியட்' உலகம் கொண்டாடிய காதல் காவியம் என்பதை நாம் அறிவோம்.

இந்த கதையைத் தழுவி 1968ம் ஆண்டு பாராமவுன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் ரோமியோ அண்ட் ஜூலியட்.

இதனை ஃப்ரான்கோ ஜெஃபிரெல்லி என்பவர் இயக்கினார். ஒலிவியா ஹஸ்ஸி மற்றும் லியோனர்ட் வைட்னிங்க் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

திரைப்படம் வெளியாகி 55 ஆண்டுகள் ஆகும் நிலையில் அந்த திரைப்படத்தில் தங்களை ஏமாற்றி நிர்வாணக் காட்சியில் நடிக்க வைத்ததாக ஒலிவியா மற்றும் லியோனர்ட் குற்றம் சாட்டியுள்ளனர்.

 ஒலிவியா மற்றும் லியோனர்ட்
ஒலிவியா மற்றும் லியோனர்ட்Newssense

இதற்கு நிவாரணமாக 500 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் அளித்த வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் சிறிய வயதிலேயே நிர்வாணமாக நடிக்க வைத்ததாகவும், நிர்வாண காட்சிகள் இல்லை எனத் தொடக்கத்தில் கூறி, பின்னர் அந்த காட்சியில் நடிக்க வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தை நட்சத்திரங்களை ஏமாற்றி அழுத்தம் கொடுத்ததற்காக இயக்குநர் ஃப்ரான்க்கோ மீது பழி சுமத்தப்பட்டாலும் தயாரிப்பு நிறுவனமான பாராமவுன்ட் பிக்சர்ஸ் இது குறித்து அறிந்திருக்க வேண்டும் என்று வழக்கில் நடிகர்கள் தரப்பு கூறியுள்ளது.

ரோமியோ ஜூலியட் : நிர்வாண காட்சியில் நடித்த குழந்தை நட்சதிரங்கள்- 70 வயதில் வழக்கு தொடுப்பு
IFFI : "இந்த திரைப்படம் நாகரீகமற்றது" - காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை விளாசிய நடுவர்!

அந்த படுக்கையறை நிர்வாண காட்சியில் நடித்த போது ஒலிவியாவுக்கு 16 வயது மற்றும் லியனர்டோவிக்கு 17 வயது.

இப்போது தங்களது 70களில் இருக்கும் நடிகர்கள், "எங்களுக்கு துணி நிறத்திலான உடை கொடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் படப்பிடிப்பு நேரத்தில் நிர்வாணமாக நடிக்க கூறினர்" என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இந்த காட்சியால் அப்போது தாங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும், வேலைவாய்ப்புகளை இழந்ததாகவும் கூறியுள்ளனர்.

ரோமியோ ஜூலியட் : நிர்வாண காட்சியில் நடித்த குழந்தை நட்சதிரங்கள்- 70 வயதில் வழக்கு தொடுப்பு
Top 10 Films : இந்திய சினிமா வரலாற்றில் சிறந்த 10 படங்கள் இவைதான்!

மேலும் அதனால் ஏற்படும் பிரச்னைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பது தெரியாத வயதில் அதனைச் செய்ததாகவும் கூறியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாராமவுன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

இயக்குநர் ஃப்ரான்கோ கடந்த 2019ம் ஆண்டு மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோமியோ ஜூலியட் : நிர்வாண காட்சியில் நடித்த குழந்தை நட்சதிரங்கள்- 70 வயதில் வழக்கு தொடுப்பு
Love Calculator : உங்க Partner மீது எவ்வளவு காதல் இருக்குணு தெரிஞ்சுகணுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com