காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை மிகவும் மோசமாக கடிந்துள்ளார் சர்வதேச திரைப்பட விழா நடுவர்.
80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியைக் கதைக் களமாகக் கொண்டு படம் வெளியாகியுள்ளது.
கடந்த 9 நாட்கள் நடந்து நேற்றுடன் நிறைவான கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 15வது படமாக காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் ஸ்பெயின் நாட்டுத் திரைப்படமான I Have Electric Dreams சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.
இந்த ஆண்டுக்கான திரையுலக பிரபலம் விருதை, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார்.
இந்த விழாவின் தலைமை நடுவரான இஸ்ரேல் திரைப்பட இயக்குநர் நாதவ் லபிட் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் இங்கு திரையிடப்பட்டது முற்றிலும் பொருந்தாது என்று விமர்சித்தார்.
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பார்த்து நடுவர்கள் அதிர்ச்சி அடைந்ததாக கூறிய அவர், "இந்த படம் நாகரீகமற்றது, கொச்சையானது. பிரச்சாரம் செய்யும் வலையில் இருக்கிறது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது கலையில் அவசியமானது என்பதனால் நான் இதனைக் கூறுகிறேன்" என்றார் அவர்.
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் இதற்கு முன்னரும் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது. ஆனாலும் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக அந்த படத்துக்கு ஆதரவு அளித்தது.
பிரதமர் மோடி படக்குழுவினரை அழைத்துப் பாராட்டினார். மத்தியபிரதேசம் மாநில பாஜக அரசு ஒரு படி மேலே சென்று காவல்துறையினர் இந்த திரைப்படத்தைப் பார்க்க விடுமுறை அளித்தது.
தொடக்கத்திலிருந்தே இந்த படம் காஷ்மீரி முஸ்லீம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust