நாட்டு நாட்டு: ஆஸ்கரை தட்டிச் சென்ற ஆர் ஆர் ஆர் பட பாடல்!

சிறந்த ஒரிஜினல் சாங் பிரிவில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு (நாட்டுக் கூத்து) பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
நாட்டு நாட்டு: ஆஸ்கரை தட்டிச் சென்ற ஆர் ஆர் ஆர் பட பாடல்!
நாட்டு நாட்டு: ஆஸ்கரை தட்டிச் சென்ற ஆர் ஆர் ஆர் பட பாடல்!ட்விட்டர்

ஆஸ்கர் 2023ல் சிறந்த ஒரிஜினல் சாங் பிரிவில் விருதினை வென்றுள்ளது நாட்டு நாட்டு பாடல். இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் விருதினை பெற்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர் ஆர் ஆர். ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டொர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது

இந்தியா ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்த காலக்கட்டத்தை மையமாக கொண்ட கதையாக ஆர் ஆர் ஆர் எடுக்கப்பட்டிருந்தது. விறுவிறுப்பான கதைக்களத்துடன், சிறந்த கிராஃபிக்ஸ், துள்ளலான பாடல்கள் என, குறைந்த இடைவெளியில் அதிக ரசிகர்களை ஈர்த்தது இத்திரைப்படம்.

கமர்ஷியல் ரீதியாகவும் தொழில்நுட்பட் ரீதியாகவும் திரைப்படம் வெகுவாக பாராட்டப்பட்டது.

வசூல் ரீதியாகவும் பல சாதனைகள் படைத்தது. தமிழகத்தில் ரூ. 12.73 கோடி, வெளிநாடு உள்பட மற்ற இடங்களில் ரூ. 75 கோடி வசூலித்தது.

திரைப்படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கு படக்குழு சமர்ப்பித்தது. முதலில் விருதுகள் பட்டியலில் இடம்பெறாவிட்டாலும், விடா முயற்சியாக படக்குழு மீண்டும் திரைப்படத்தை, சிறந்த திரைப்படம், சிறந்த ஒரிஜினல் சாங் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதிற்காக சமர்பித்தது.

நாட்டு நாட்டு: ஆஸ்கரை தட்டிச் சென்ற ஆர் ஆர் ஆர் பட பாடல்!
RRR: மீண்டும் வாகை சூடிய ராஜமௌலி படம் - Critics Choice Awardsல் இரண்டு விருதுகள்

இந்நிலையில், சிறந்த ஒரிஜினல் சாங் பிரிவில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு (நாட்டுக் கூத்து) பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி பின்னணி இசையமைத்திருக்கிறார். ராகுல் சிப்லிகுஞ்ச், யாசின் நிஸார் இந்த பாடலை பாடியுள்ளனர். பாடலாசிரியர் சந்திரபோஸ் இந்த பாடலின் வரிகளை அமைத்திருக்கிறார்.

ஆஸ்கர் விருதினை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் பெற்றுக்கொண்டனர்.

நாட்டு நாட்டு பாடல், இதற்கு முன்னதாக, கோல்டன் க்ளோப், கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகளை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது

நாட்டு நாட்டு: ஆஸ்கரை தட்டிச் சென்ற ஆர் ஆர் ஆர் பட பாடல்!
RRR: பாராட்டு மழையில் நனையும் ராஜமௌலியின் படம் - தேடி வந்த 5 விருதுகள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com