RRR: பாராட்டு மழையில் நனையும் ராஜமௌலியின் படம் - தேடி வந்த 5 விருதுகள்?

சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரான திரைப்படம், 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலிருந்தும் இந்த படம் ரசிகர்களை கவர்ந்திருந்தது.
RRR
RRRTwitter
Published on

க்ரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகளுக்கு ஐந்து பிரிவுகளில் தேர்வாகியுள்ளது ஆர்ஆர்ஆர் திரைப்படம்.

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்ஆர்ஆர். ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரிட்டிஷ் காலத்தில் நடைபெறும் இந்த கதை பிரம்மாண்ட காட்சிகளுடன் தயாரிக்கப்பட்டது. பலரும் இந்த படத்தை தொழில்நுட்ப ரீதியாக பாராட்டியிருந்தனர்.

சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரான திரைப்படம், 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலிருந்தும் இந்த படம் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

இந்த வருடத்திற்கான ஆஸ்கார் விருதுகளுக்கு ஆர் ஆர் ஆர் தேர்வாகும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அந்த படம் தேர்வாகவில்லை. படக்குழு இந்த படத்தை அனைத்து பிரிவுகளிலும் தேர்வு செய்யவேண்டும் என மறு கோரிக்கை விடுத்தனர். அதுவும் பலனளிக்கவில்லை.

RRR
"RRR ஒரு Gay காதல் படம்" - ஆஸ்கர் வென்ற ரெசூல் பூக்குட்டி கருத்தால் கொந்தளித்த ரசிகர்கள்

இந்நிலையில், கோல்டன் க்ளோப் 2023 விருதுகளுக்காக இரண்டு பிரிவுகளில் ஆர் ஆர் ஆர் தேர்வாகியுள்ளதாக கடந்த 12ஆம் தேதி செய்திகள் வெளியாகின. சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்படம் (Non English Film Category) மற்றும் ”நாட்டு நாட்டு” பாடலுக்காக ஒரிஜினல் சாங் ஆகிய பிரிவுகளில் ஆர் ஆர் ஆர் தேர்வாகியுள்ளது.

இதனை தொடர்ந்து மீண்டும் மற்றொரு விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது ராஜமவுளியின் திரைப்படம்.

கிரிடிக் சாய்ஸ் விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம்,

சிறந்த படம்,

சிறந்த இயக்குநர்,

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்,

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும்

சிறந்த பாடல் ( நாட்டு நாட்டு) ஆகிய பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை தவிர செல்லோ ஷோ காந்தாரா கங்குபாய் கதியாவாடி ஆகியப்படங்களும் கோல்டன் க்ளோபிற்கு தேர்வாகியுள்ளன.

ஆஸ்காருக்கு அதிகாரப்பூர்வ பரிந்துரையாக இந்திய திரைப்படம் செல்லோ ஷோ தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

RRR
ஆர் ஆர் ஆர், காஷ்மீர் ஃபைல்ஸ் படங்களுக்கு ஆஸ்கார் இல்லையா? தேர்வான குஜராத்தி திரைப்படம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com