நடிகர் முகேஷ் கன்னா நடிப்பில் வெளியான சக்திமான் நாடகம் திரைப்படமாக்கப்படவுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் நடிகர் முகேஷ் கன்னா.
சூப்பர் ஹீரோ படங்கள் என்றாலே, மார்வெல், டிசி என தான் இப்போதெல்லாம் பேசுகின்றனர்.
ஆனால் அதுவெல்லாம் இந்தியாவில் பிரபலமடைந்தது இப்போது தான். அயன் மேன், ஸ்பைடர்மேன்களுக்கு எல்லாம் முன்னோடியாக இந்தியாவில் இருந்த சூப்பர் ஹீரோ சக்திமான். குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகனாக இருந்தார்.
1997ல் தொடங்கிய இந்த சீரியல் சுமார் 8 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடியது. இந்தியில் வெளியான இந்த சீரியல் தமிழில் டப் செய்யப்பட்டது. பிரபல இந்தி நடிகர் முகேஷ் கன்னா இதில் கதாநாயகனாக நடித்தார்.
சக்திமான் தொடரை திரைப்படமாக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின. அதன் பிறகு திரைப்படம் குறித்த எந்த அப்டேட்களும் வரவில்லை.
இந்நிலையில் தனது யூடியூப் சேனலில் இது குறித்து பேசிய நடிகர் முகேஷ் கன்னா, திரைப்படம் சர்வதேச தரத்தில் உருவாகவுள்ளது எனக் கூறியுள்ளார். திரைப்படத்துக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது எனவும், மூன்று பாகங்களாக உருவாகவுள்ள இதில், ஒரு படத்தின் பட்ஜெட் ரூ. 200 முதல் 300 கோடி வரை ஆகும் எனவும் கூறியுள்ளார்
சோனி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகிறது. இந்த திரைப்படத்தில் சக்திமான் கதாபாத்திரத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பார் என தகவல்கள் கூறுகின்றன. இயக்குநர் பேசில் ஜோசப் இதனை இயக்குகிறார்.
கொரோனா போன்ற காரணங்களினால் திரைப்படம் உருவாவதில் தாமதமானது என கூறியுள்ளார். திரைப்படம் குறித்த மற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust