துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு நடிகர் சல்மான் கான் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
தனிப்பட்ட பாதுகாப்பு காரணத்திற்காக திரைத்துறையினர் தொடங்கி சாதாரண மக்கள் வரை துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமம் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது மும்பையில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
கடந்த மாதம் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கானுக்கு கொலை மிரட்டல் வந்தது.
அவர்களுக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட கதியை சந்திப்பீர்கள் எனக் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தான் நடிகர் சல்மான் கான் தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்தியாவில் தற்காப்பு காரணத்திற்காக துப்பாக்கி உரிமம் வாங்க முடியும்.
புதிதாக துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் மூன்று மாதங்களுக்குள் துப்பாக்கி வாங்கிவிட வேண்டும்
மூன்று வருடங்கள் வரை அந்த லைசென்ஸ் செல்லுப்படியாகும்
அதற்கான காலக்கெடு முடிந்த பிறகு கட்டாயம் உரிமம் புதுப்பிக்க வேண்டும்
துப்பாக்கி உரிமம் பெற்ற ஒரு நபர் அதிகபட்சம் மூன்று துப்பாக்கிகளை மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust