அக்‌ஷய், சல்மான், ஸ்மிரிதி : கேஸ் விலை உயர்வு குறித்து 2012-ல் சொன்னது என்ன தெரியுமா?

மத்திய அரசின் நடவடிக்கைகளால் பெட்ரோல் மற்றும் கேஸ் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இன்று கேஸ் கூடுதலாக 50 ரூபாய் உயர்ந்ததை அடுத்து மக்கள் பலரும் கொந்தளித்து வர, பேரமைதி காக்கின்றனர் முன்னாள் போராளிகள்.
பிரபலங்கள்
பிரபலங்கள்Twitter
Published on

சாமானிய மக்களின் அன்றாட வாழ்வு இம்மியளவு பாதிக்கப்பட்டால் கூட பொருக்க முடியாமல் பொங்கி எழுவார்கள் நம் பாலிவுட் நட்சத்திரங்கள். பெட்ரோல் விலையோ, கேஸ் விலையோ உயர்ந்தால் அவர்களால் அதனை தட்டிக் கேட்காமல் இருக்க முடியாது. இதெல்லாம் 2014க்கு முன்.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் பெட்ரோல் மற்றும் கேஸ் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இன்று கேஸ் கூடுதலாக 50 ரூபாய் உயர்ந்ததை அடுத்து மக்கள் பலரும் கொந்தளித்து வர, பேரமைதி காக்கின்றனர் முன்னாள் போராளிகள்.

இந்த நிலையில் அக்‌ஷய் குமார் முதல் அமிதாப் பச்சன் வரை பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் விலைவாசி உயர்வு குறித்த ட்வீட்கள் ட்ரெண்டாகி வருகிறது. அதில் சிலவற்றைக் காணலாம்.

சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநர், 2012ல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போட்ட பதிவு இது...

இன்று உயர்திருப்பதைப் போன்றே 50 ரூபாய் கேஸ் விலையை ஆம் ஆத்மி அரசு உயர்த்தியதற்காக "என்ன அவமானம்!" எனக் கேட்டிருக்கிறார் ஸ்மிருதி இராணி.

2012ம் ஆண்டில் பெட்ரோல் விலை உயர்ந்த போது தனது ஓட்டுநர் பைக்கை வீட்டில் காட்சிப் பொருளாக வைத்துவிட்டார் என ட்வீட் செய்திருக்கிறார் அனுபம் கெர்.

அடுத்த தேர்தலில் இருந்து பைக்கையே மறந்திருப்பார் அந்த டிரைவர்.

பிரபலங்கள்
Petrol Price : பெட்ரோல் சிக்கனத்திற்கு சில எளிமையான வழிகள்! | Tips

2010ம் ஆண்டு டிவிட்டரில், "பெட்ரோல் விலை குறித்து கவலை வேண்டாம். உங்களுக்கு மாட்டுச் சாணம் அனுப்பப்படுகிறது. அதை வைத்து எரிபொருள் தயார் செய்யுங்கள்" என நகைச்சுவையாகப் பதிவிட்டிருக்கிறார் சல்மான் கான்.

இந்த நகைச்சுவை 10 ஆண்டுகளுக்கு பிறகும் சிரிக்க வைப்பது தான் ஹைலைட்!

இன்னும் சில ட்வீட்கள்....

பிரபலங்கள்
Baba Ramdev: பெட்ரோல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு பத்திரிகையாளரை திட்டிய பாபா ராம்தேவ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com