Samantha: Interviewவில் கண்ணீர்விட்டு அழுத நடிகை; இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்நிலையில், சமீபத்தில் யஷோதா படத்தின் புரோமோஷனுக்காக தெலுங்கு நேர்காணல் ஒன்றில் நடிகை பங்கேற்றிருந்தார். அதில் அவரது நோய் குறித்தும் அதனால் அவர் மனதளவில் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்தும் சமந்தா மனம் திறந்தார்.
Samantha
SamanthaTwitter
Published on

சமீபத்தில் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் நடிகை சமந்தா, தனக்கு இருக்கும் மயோசிட்ஸ் குறைபாடு பற்றி பேசும்போது மனமுடைந்து கண்ணீர்விட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் விஜய், விக்ரம், ஜீவா உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். தெலுங்கில் கிட்ட தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சமந்தா நடித்திருக்கிறார்.

சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நான்கு வருடங்கள் கழித்து கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு சமந்தா மனம் திறக்கவில்லை என்றாலும், தனது சமூகவலைத்தள பக்கங்களில் பாசிட்டிவிட்டி குறித்த போஸ்ட்களை பதிவிட்டு வந்தார்.

அவருக்கு திரையுலகினர் பலரும் ஆதரவுகளையும் அன்புகளையும் தெரிவித்துவந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன் அரிய வகை நோய் ஒன்றினால் சமந்தா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன் சிகிச்சைக்காக சமந்தா வெளிநாடு செல்கிறார் எனவும் கூறப்பட்டது.

Samantha
விவாகரத்துக்கு பிறகும் டாட்டூவை அழிக்க விரும்பாத நாக சைதன்யா - சமந்தா முடிவு என்ன?

இந்நிலையில், கடந்த மாதம் Myositis என்ற ஆட்டோ இம்யூன் நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து மெல்ல மீண்டு வருவதாகவும் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டே விரைவில் வெளியாகவுள்ள யஷோதா திரைப்படத்தின் டப்பிங்கை செய்துகொண்டிருந்தார் சாம்!

அந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்ததிலிருந்து அதிர்ச்சியடைந்த பல பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு துணை நிற்பதாக ஆதரவு தெரிவித்து வந்தனர்.

Samantha Ruth Prabhu Diagnosed With Myositis
Samantha Ruth Prabhu Diagnosed With MyositisTwitter

இந்நிலையில், சமீபத்தில் யஷோதா படத்தின் புரோமோஷனுக்காக தெலுங்கு நேர்காணல் ஒன்றில் நடிகை பங்கேற்றிருந்தார். அதில் அவரது நோய் குறித்தும் அதனால் அவர் மனதளவில் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்தும் சமந்தா மனம் திறந்தார். அப்போது அவர் இடையில் பேச முடியால் கண்ணீர்விட்டு அழுதார்.

நேர்காணலில் அவர்,சில நாட்கள் நன்றாகவும் சில நாட்கள் மோசமாகவும் இருக்கும். ஒரு சில நாட்களில் என்னால் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாது என்று தோன்றும் என்றார்.

ஆனால், ஒரு சில சமயங்களில் திரும்பி பார்த்தால், இவ்வளவு விஷயங்களை நான் கடந்து வந்திருக்கிறேனா எனத் தோன்றும். I am here to Fight" எனக் கண்ணீர் மல்க அவர் தெரிவித்தார். அவரது தைரியத்தை பார்த்து தொகுப்பாளார் அவரை பாராட்டியிருந்தார்.

சமந்தா நேர்காணலில் அழுத வீடியோ இணையத்தில் பரவியதில், பலரும் ஆறுதல்களை தெரிவித்தனர். மேலும் அவரது மன உறுதியை பாராட்டிய ரசிகர்கள், இந்த பயணத்தில் அவர் தனியாக இல்லை எனவும் கூறி வருகின்றனர்.

Samantha
Samantha : Myositis நோயால் பாதிக்கபட்டுள்ள நடிகை - இன்ஸ்டாவில் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com