இயக்குநர், நடிகர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடலை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன், சித்தி இத்னானி, நீரஜ் மாதவ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் வெந்து தணிந்தது காடு. சாதாரண திருநெல்வேலி அருகே உள்ள கிராமத்து இளைஞன் முத்து வீரன் பிழப்பை தேடி பம்பாய்க்கு செல்கிறான். இவன் பல இன்னல்களை கடந்து எப்படி டான் ஆகிறான் என்பது கதை.
வழக்கமான மாஸ் காட்சிகள் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. எனினும் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தன. குறிப்பாக மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே பாடல், பாமரன் முதல் ஹை கிளாஸ் மக்கள் வரை சென்றடைந்தது.
முதலில் அதன் மெட்டிற்கு வைப் செய்து கொண்டிருந்த இணையம், பின்னர் பாடலின் தன்மையை அறிந்து ரசிக்க துவங்கியது. பாடலின் வரவேற்பை பார்த்து அதை எழுதிய கவிஞர் தாமரை, அதை எழுதிய நோக்கமும், அதன் சாரத்தையும் பகிர்ந்தார்.
வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு குடும்பத்தை பிரிந்து வேலைக்கு செல்லும் கணவர்களுக்கு மனைவிகள் பாடும் பாடலாக இது வடிவமைக்கப்பட்டது. ஏக்கம், காதல், பிரிவு என பல உணர்ச்சிகளை அடக்கிய பாடலாக இது அமைந்தது.
தற்போது இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் பாடல் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். மல்லிப்பூ பாடலை சமீப காலமாக பயணங்களிலும், ஓய்வு நேரங்களிலும் கேட்டு வருவதாக அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், பாடலாசிரியர் தாமரை, மற்றும் பாடலை பாடிய பின்னணி பாடகி மதுஸ்ரீ ஆகியோரையும் பாராட்டியிருந்தார்.
"அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் கௌதம் மேனன் அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் ஐசரி கனேஷ் அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..!" என சீமான் ட்வீட் செய்திருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust