சாணி காயிதம்: Fan எடிட் செய்த வீடியோவை பகிர்ந்து பாராட்டிய செல்வராகவன்

மாயாண்டி - விருமாயி சங்கையா - பொன்னி கதாபாத்திரங்கள் கதையின் களத்திற்கு ஏற்றவாறு வடிவமைப்பு வேறுபாடாக இருக்கலாம், ஆனால் அண்ணன்-தங்கை உறவு என்பது இரத்தமும் சதையும் கலந்தது, காலத்தால் அழியாதது - பாரதிராஜா
சாணி காயிதம்
சாணி காயிதம்Twitter
Published on

மே 6ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது சாணிக்காயிதம் திரைப்படம்.

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த இந்த படத்தை அருண் மாத்தேஸ்வரன் இயக்கியிருந்தார். இவர் இதற்கு முன் வசந்த் ரவி நடித்த ராக்கி படத்தை இயக்கியவர். இரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறையுடன் கூடிய திரைப்படங்களின் மூலம் இரண்டாவது படத்திலேயே தனக்கென தனித்துவமான இடத்தையும் ரசிகர்களையும் சம்பாதித்துள்ளார் அருண்.

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததாக பாராட்டப் பெற்றனர்.

தற்போது இந்த படத்தின் சிறிய க்ளிப்களை எடிட் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இதனை தனது ட்விட்டரில் பகிர்ந்த செல்வராகவன், "விக்ரம் எனும் ரசிகரால் எடிட் செய்யப்பட்ட இந்த வீடியோவை மிகவும் விரும்புகிறேன். இதனை அனுப்பியதற்கு நன்றி" என தலைப்பிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், சாணிகாயிதம் திரைப்படத்தின் காட்சிகள் கிழக்குச் சீமையிலே பட பாடலுடன் சேர்த்து எடிட் செய்யப்பட்டிருந்தது. செல்வராகவன் மட்டுமின்றி இயக்குநர் பாரதிராஜாவும் அந்த வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அவர், "மாயாண்டி - விருமாயி சங்கையா - பொன்னி கதாபாத்திரங்கள் கதையின் களத்திற்கு ஏற்றவாறு வடிவமைப்பு வேறுபாடாக இருக்கலாம், ஆனால் அண்ணன்-தங்கை உறவு என்பது இரத்தமும் சதையும் கலந்தது, காலத்தால் அழியாதது" என தலைப்பிட்டிருந்தார்.

சாணி காயிதம்
Mahesh Babu : பாலிவுட்டில் நடித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை - நடிகர் கருத்து
சாணி காயிதம்
இலங்கை : தமிழர் பகுதிக்கு தப்பி ஓடும் சிங்கள அரசியல்வாதிகள் - Latest Update

இந்த வீடியோ நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இதனை விக்ரம் என்பவர் எடிட் செய்துள்ளார். இவர் ஏற்கெனவே பீஸ்ட், ராக்கி என பல தமிழ் படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்களை எடிட் செய்து வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

சாணி காயிதம்
தாய்லாந்து விநோதம்: இவரது சிறுநீர் நோய்களை குணமாக்குமென மக்கள் நம்புகின்றனர் - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com