Vijay
VijayTwitter

தளபதி விஜய் சொன்ன குட்டிக் கதையை அனிமேஷன் படமாக மாற்றிய 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ | Video

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன "ஒரு நதி" குட்டிக் கதையை அனிமேஷன் வீடியோவாக மாற்றி அவரது பிறந்த நாளை ஒட்டி சர்பிரைஸ் செய்திருக்கின்றனர் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ.
Published on

ஜூன் 22ம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாட்டங்களைத் தொடங்கியுள்ளனர். காமன் டிபி வெளியிடுவது தொடங்கி போஸ்டர் ஒட்டுவது வரை இந்த கொண்டாட்டாங்களுக்கு எல்லையே இல்லை.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில் திரைத்துறைத் தொடர்பான நிறுவனங்களும் தங்கள் சார்பாக வாழ்த்துகளைக் கூறி வருகின்றன. அந்த வகையில் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ பிறந்த நாள் ஸ்பெஷலாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி நேர்காணல்களில் பங்கேற்காத விஜய், இசை வெளியீட்டு விழாக்களில் தனது ரசிகர்களுக்காக பேசும் உரை எப்போதும் பாராட்டுகளைப் பெரும்.

அப்படி அவர் மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசியதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்த மேடையில் ஒரு நதி பிறந்து நோக்கி செல்வது போல நாமும் வாழ்க்கையில் இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என ரசிகர்களுக்கு அறிவுரைக் கூறினார் விஜய்.

master audio launch
master audio launchtwitter
Vijay
பீஸ்ட் படத்தில் விஜய் குறிப்பிடும் ரஃபேல் விமானம் குறித்த 10 தகவல்கள்

இந்த குட்டிக்கதை இப்போது வரையிலும் பலரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் இடம் பிடித்து வருகிறது. இதற்கு ஒரு அனிமேஷன் திரைப்படம் போன்ற வடிவத்தைக் கொடுத்துள்ளனஎ 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay
Beast: “இந்தியில விளக்க முடியாது, போய் தமிழ் கத்து கிட்டு வா” - அரசியல் பேசிய விஜய்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com