Sex Education: ரசிகர்களை ஈர்த்த ஓடிஸின் வீட்டில் இவ்வளவு இருக்கா? விலை என்ன தெரியுமா?

18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது மீன்பிடி விடுதியாக இருந்தது. 2019ம் ஆண்டு SEX EDUCATION தொலைக்காட்சி தொடரில் தோன்றியபிறகு பலருக்கும் இப்படிப்பட்ட வீட்டில் வாழ வேண்டும் என்ற ஆசையை உருவாக்கியது.
Sex Education: ரசிகர்களை ஈர்த்த ஓடிஸின் வீட்டில் இவ்வளவு இருக்கா? - விலை என்ன தெரியுமா?
Sex Education: ரசிகர்களை ஈர்த்த ஓடிஸின் வீட்டில் இவ்வளவு இருக்கா? - விலை என்ன தெரியுமா?Twitter

நெட்ஃப்ளிக்ஸின் பிரபல தொடரான செக்ஸ் எஜுகேஷனில் வந்த வீடு இப்போது விற்பனைக்கு வந்துள்ளது.

அந்த தொடரின் மைய கதாப்பாத்திரமான ஓடிஸ் மற்றும் செக்ஸ் தெரபிஸ்ட் (பாலியல் சிகிச்சையாளர்) அம்மாவான ஜீன் இருவரும் இந்த வீட்டில் தான் வசிப்பார்கள்.

சீரிஸில் ஒவ்வொரு முறை ஓடிஸின் வீட்டைக்காட்டும் போதும் பசுமையான சுற்றுப்புறத்துடன் பள்ளத்தாக்கில் இருக்கும் அந்த வீடு ரசிகர்களைக் கவரும். இப்போது பார்வையாளர்களுக்கே அந்த வீட்டை சொந்தமாக்கிக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

இந்த வீட்டின் மதிப்பு சுமார் 1.5 மில்லியன் பவுண்ட்கள். இந்திய மதிப்பில் சுமார் 15 கோடி ரூபாய்!

இங்கிலாந்தின் ஹெர்ஃபோர்ட்ஷர் பகுதியில் சைமண்ட்ஸ் யாட் என்ற இடத்தில் வை நதியை நோக்கியவாரு அமைந்திருக்கிறது இந்த வீடு.

18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது மீன்பிடி விடுதியாக இருந்தது. 2019ம் ஆண்டு தொலைக்காட்சி தொடரில் தோன்றியபிறகு பலருக்கும் இப்படிப்பட்ட வீட்டில் வாழ வேண்டும் என்ற ஆசையை உருவாக்கியது.

பிரிஸ்டலில் உள்ள நைட் ஃப்ரான்க் என்பவர்தான் இந்த வீட்டை விற்கிறார். இதில் 5 படுக்கையறைகளும் 3 குளியலறைகளும் உள்ளது. மூன்று தளங்களைக் கொண்ட இந்த வீட்டின் பால்கனி வை பள்ளத்தாக்கின் அட்டகாசமான இயற்கைக் காட்சியை வழங்கக் கூடியது.

அந்த பால்கனியில் நடைபெற்ற ஜீன் மற்றும் ஆடமின் உரையாடல் போன்ற முக்கியமான காட்சிகளை ரசிகர்களால் மறக்க முடியாது.

Sex Education: ரசிகர்களை ஈர்த்த ஓடிஸின் வீட்டில் இவ்வளவு இருக்கா? - விலை என்ன தெரியுமா?
கண்ணுக்கே தெரியாத வீடு - எங்கே இருக்கிறது இந்த invisible house? என்ன ஸ்பெஷல்?

2002ம் ஆண்டு இப்போதைய உரிமையாளரால் வாங்கப்பட்ட பிறகு முழுமையாக நார்வேயன் டிசைனுக்கு இந்த வீட்டை மாற்றியுள்ளானர். மரத்தாலான அறைகளை நீட்டிப்பு செய்துள்ளனர்.

இந்த வீடு தனியாகவும் அமைதியாகவும் இருந்தாலும், இங்கிருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே பழமையான தேவாலயம் ஒன்றும் அமைந்திருக்கிறது. இந்த தேவாலயத்தை வாங்குவதற்கான வாய்ப்பும் இருப்பதாக பிபிசி கட்டுரைத் தெரிவிக்கிறது.

Sex Education: ரசிகர்களை ஈர்த்த ஓடிஸின் வீட்டில் இவ்வளவு இருக்கா? - விலை என்ன தெரியுமா?
துபாயின் மிகவும் விலையுயர்ந்த வீடு இதுதானா? இதன் மதிப்பு இத்தனை கோடியா?

இந்த வீடு 4.52 ஏக்கர் பரப்பளவில அமைந்துள்ளது. பரந்து விரிந்த புல்வெளி. ஒரு கோடைக்கால வீடு, இரண்டு பசுமைகுடில்கள், சமையலறைத் தோட்டம் என பல விஷயங்களை உள்ளடக்கியது.

மிக முக்கியமாக வீட்டின் எல்லா முடுக்கிலும் ஓடிஸ், ஜீன் மற்றும் செக்ஸ் எஜுகேஷன் கதாப்பாத்திரங்களின் நினைவுகள் இருக்கின்றன.

Sex Education

பதின் பருவத்தினருக்கு ஏற்படும் காதல், காமம், கலவி சார்ந்த சந்தேகங்கள், நல்ல பாலியல் பழக்கங்கள், உறவுகள் பற்றி பேசும் காமெடி சீரிஸாகும். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் பார்க்க முடியும், 18 வயதுவந்தவர்கள் மட்டுமே பார்க்கலாம்!

Sex Education: ரசிகர்களை ஈர்த்த ஓடிஸின் வீட்டில் இவ்வளவு இருக்கா? - விலை என்ன தெரியுமா?
Sex Education, Narcos, Dark - Netflixல் இவற்றை தவர விடாதீர்கள் !

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com