கண்ணுக்கே தெரியாத வீடு - எங்கே இருக்கிறது இந்த invisible house? என்ன ஸ்பெஷல்?

பார்ப்பவர்களுக்கு சட்டென இந்த இடத்தில் ஒரு கட்டமைப்பு இருப்பது கண்களுக்கு தெரியாது. இரவில் காண்கையில், அழகிய பரந்து விரிந்த வானமும், நட்சத்திரங்களும் அந்த கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் காட்சி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்
கண்ணுக்கே தெரியாத வீடு - எங்கே இருக்கிறது இந்த invisible house? என்ன ஸ்பெஷல்?
கண்ணுக்கே தெரியாத வீடு - எங்கே இருக்கிறது இந்த invisible house? என்ன ஸ்பெஷல்?Twitter
Published on

இயற்கையின் அழகை, அதன் மர்மத்தை கண்டு நாம் பிரம்மிக்காத நாள் இல்லை. இதனுடன் மனிதனின் மூளையும் சேர்ந்துகொண்டால் இன்னும் பல ஆச்சரியங்கள் பிறக்கும்.

பல முறை, ஒரு இடத்தில் மரம் வளர்ந்திருந்தால், அதனை வெட்டாமல், அதனைச் சுற்றியோ, அதன் போக்கிலோ வீடு வடிவமைக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம்.

இங்கும் அப்படி இயற்கையுடன் ஒன்றிய ஒரு அதிசய வீடு இருக்கிறது. ஆனால் இந்த வீட்டை நம்மால் கண்ணார பார்க்க இயலாது. இது ஒரு இன்விசிபிள் ஹவுஸ்.

ஆம், இது கண்ணுக்கே தெரியாத வீடு. அதெப்படி வீடு கண்ணுக்கு தெரியாமல் இருக்கும்? இந்த பதிவில் இருக்கிறது அதற்கான பதில்!

கலிஃபோர்னியாவின் ஜோஷுவா ட்ரீ தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது இந்த வீடு. பாலைவனப் பகுதியான இங்கு இயற்கையுடன் ஒன்றியிருக்க வேண்டும் என்பதற்காகவே பிரத்தியேகமாக இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜோஷுவா ட்ரீ தேசிய பூங்காவின் அழகியலின் நீட்சியாக இந்த வீடு அமையவேண்டும் என்பதே வடிவமைப்பாளர்களின் எண்ணமாக இருந்ததாம்.

வடிவமைப்பு

மிகவும் எளிமையான மற்றும் குறைவான பொருட்செலவில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதனை கட்டிடக்கலையின் அற்புதங்களில் நிச்சயமாக சேர்க்கலாம்.

நிலையான பொருட்களையும் (sustainable materials) நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட இந்த வீட்டின் சிறப்பம்சமே இதன் வெளிப்புறம் தான்.

வீட்டின் உட்புறம் முழுவதும், உள்ளேயிருந்து ஒருவர் பாலைவனத்தின் அழகை கண்டு ரசிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், வெளிப்புறமோ, முற்றிலும் கண்ணாடியால் ஆனது.

இதனால் தான், பார்ப்பவர்களுக்கு சட்டென இந்த இடத்தில் ஒரு கட்டமைப்பு இருப்பது கண்களுக்கு தெரியாது. இரவில் காண்கையில், அழகிய பரந்து விரிந்த வானமும், நட்சத்திரங்களும் அந்த கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் காட்சி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்

கண்ணுக்கே தெரியாத வீடு - எங்கே இருக்கிறது இந்த invisible house? என்ன ஸ்பெஷல்?
தன்னந்தனியாக கப்பல் வீடு கட்டும் விவசாயி - 13 ஆண்டு கால உழைப்பு எப்போது நிறைவடையும்?

வீட்டின் உட்புறம்

வெளியில் இருந்து பார்ப்பதற்கு வீடு இருப்பதே தெரியாது. ஆனால் உள்ளே ஒரு தனி சொகுசு உலகமே இருக்கிறது எனலாம்.

வீட்டிற்குள் ஒரு 100 அடி நீச்சல் குளம் இருக்கிறது. மழை பொழிந்தால் நீரை சேகரிக்க தொட்டிகளும், சோலார் பேனல்களும் உள்ளன.

தனியாருக்கு சொந்தமான இந்த வீடு இப்பொது படப்பிடிப்பு, ஃபோட்டோகிராஃபி ஆகியவற்றிற்காக மட்டுமே வழங்கப்படுகிறது

கண்ணுக்கே தெரியாத வீடு - எங்கே இருக்கிறது இந்த invisible house? என்ன ஸ்பெஷல்?
8 அறை 160 அறைகளாக மாறியது எப்படி? அமானுஷ்ய வீடு கட்டப்பட்டதன் பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com