Thalapathy 67: Hollywood ரீமேக்கா? LCU -வின் புதிய படமா? தகவல்கள் சொல்வதென்ன?

விக்ரம் படத்தின் இரண்டாவது க்ளைமேக்ஸ் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தின் இன்ட்ரோ. அதன் படி தளபதி 67 விஜய் மற்றும் சூர்யா கூட்டணியும் அமைய வேண்டும் என்பது ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பு.
Thalapathy 67: Hollywood ரீமேக்கா? LCU -வின் புதிய படமா? ரோலக்ஸை சந்திப்பாரா விஜய்?
Thalapathy 67: Hollywood ரீமேக்கா? LCU -வின் புதிய படமா? ரோலக்ஸை சந்திப்பாரா விஜய்?Twitter
Published on

தளபதி விஜய் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணையும் திரைப்படம் தளபதி 67. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ரசிகர்களுக்கு பல சர்பிரைஸ்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தளபதி 67 படத்துக்கான முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது நாம் அறிந்ததே. இந்த படத்தின் கதையில் பணியாற்றுவதற்காக லோகேஷ் ட்விட்டரில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

சரி லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67, கைதி, விக்ரம் படங்களின் உலகமான லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸின் பகுதி தான் என்பது இப்போது அடிபடும் முக்கியச் செய்தி.

விக்ரம் படத்தைப் பொறுத்தவரை சென்னையில் போதைப்பொருள் கடத்தலில் முக்கியப் புள்ளியாக இருந்த சந்தனம் (விஜய் சேதுபதி) கொல்லப்படுவது முதல் க்ளைமேக்ஸ். இதன் தொடர்ச்சியாக மும்பையை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் படமாக தளபதி 67 இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் இரண்டாவது க்ளைமேக்ஸ் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தின் இன்ட்ரோ. அதன் படி தளபதி 67 விஜய் மற்றும் சூர்யா கூட்டணியும் அமைய வேண்டும் என்பது ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பு.

Thalapathy 67: Hollywood ரீமேக்கா? LCU -வின் புதிய படமா? ரோலக்ஸை சந்திப்பாரா விஜய்?
LCU : லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என்பது என்ன? அங்கு என்னென்ன நடக்கும்?

விஜய் - லோகேஷுடன் மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமாரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கைதி மற்றும் விக்ரம் படத்துக்கு வேறு வேறு தயாரிப்பாளர்கள் என்பதனால் ஒரே யூனிவர்ஸில் கதைகளை இணைப்பதில் சவால்களை சந்தித்தார் லோகேஷ். இப்போது LCUவில் மூன்றாவதாக ஒரு தயாரிப்பாளரும் இணைவதும் இன்னும் சிக்கல்களை உருவாக்கும். இதனால் தளபதி 67 LCU படமாக இருக்காது என ஒருசாரார் கூறுகின்றனர்.

லோகேஷின் படங்கள் ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படத்தின் சாயலில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இப்போது அந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் உரிமையை லோகேஷ் வாங்கியிருக்கிறார். எனவே தளபதி 67 தனிப்படமாக ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸை மையப்படுத்தியதாக இருக்கும் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றது.

Thalapathy 67: Hollywood ரீமேக்கா? LCU -வின் புதிய படமா? ரோலக்ஸை சந்திப்பாரா விஜய்?
தளபதி 67? கைதி 2? சமூக வலைத்தளங்களிலிருந்து விலகிய லோகேஷ் - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com