ஷகிலாவுக்காக அடித்து கொள்ளும் மகள்கள்! - என்ன தான் பிரச்சனை?

என்ன நடந்தது..மிளா, சாஷா இருவரும் கடின உழைப்பால், பல அவமானங்களை, இன்னல்களை கடந்து பேஷன் டிசைனிங் துறையில் வளர்ந்து வருகின்றனர். ஷகிலா விஷயத்தில் இருவருக்கும் இடையில் பெரிய பிரச்சனை வெடித்தது. என்ன நடந்தது என்பதை மிளா பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.
ஷகிலாவுக்காக அடித்து கொள்ளும் மகள்கள்! - என்ன தான் பிரச்சனை?
ஷகிலாவுக்காக அடித்து கொள்ளும் மகள்கள்! - என்ன தான் பிரச்சனை?NewsSense

தென்னிந்திய சினிமாவில் கிளாமர் குயின் ஆக வளம் வந்த நடிகை ஷகிலா,  குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் மீடியா வெளிச்சத்துக்கு வந்தார். இவர் மலையாள திரையுலகில் தான் பயங்கர பேமஸ் என்றாலும், தமிழில் சில திரைப் படங்களில் சின்ன சின்ன காமெடி ரோலில் நடித்து வந்தார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் `ஷகிலா அம்மா’ என்னும் புதிய அடையாளம் ஷகிலாவுக்கு உருவானது. அவர் மீது முன்பு இருந்த அபிப்ராயம் மறைந்து ஷகிலா மம்மி என்று ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது மிளா, ஷாஷா ஆகியோரால் ஷகிலாவின் பெயர் மீண்டும்  செய்திகளில் அடிபட்டு வருகிறது. 

ஷகிலாவுக்காக அடித்து கொள்ளும் மகள்கள்! - என்ன தான் பிரச்சனை?
தமிழ் சினிமா : நிச்சயம் பார்க்க வேண்டிய 50 திரைப்படங்கள் | IMDB பரிந்துரைகள்
NewsSense

மிளா, ஷாஷா யார் ?

ஷகிலாவின் வளர்ப்பு மகள் என்ற அறிமுகத்துடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும், யூ டியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனவர் தான் மிளா. திருநங்கையான மிளா, சில திரைப்படங்களிலும், சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மேலும் பேஷன் டிசைனிங் தொழில் செய்து வருகிறார். மிளா திருநங்கையாக மாறுவதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி போன்ற சீரியல்களில் ஆணாக நடித்தது குறிப்பிடத்தக்கது. குக் வித் கோமாளி க்கு பிறகு ஷகிலாவுக்கு கிடைத்த ரீச், மிளாவையும் ஃபேமஸ் ஆக்கியது. ஷகிலா எந்த நிகழ்வுக்கு சென்றாலும் மிளாவை கூட்டி செல்வார். இருவரும் சேர்ந்து போட்டோஷூட் செய்தது செம வைரல். ஷகிலாவின் யூ டியூப் சேனலிலும் மிளா பல வீடியோக்களில் தோன்றியிருப்பார்.

சாஷா ரெட்டியும் ஷகிலாவின் வளர்ப்பு மகள் தான். பிரபல செலிபிரிட்டி ஆண் நண்பருடன் லிவ் இன் வாழ்க்கை முறையில் ஏழாண்டுகள் வாழ்ந்து வந்த சாஷா, தான் gay இல்லை என்றும் தான் ஒரு பெண் என்பதையும் உணர்ந்து 2020 ஆம் ஆண்டு திருநங்கையாக மாறினார். ஃபேஷன் டிசைனராகவும், சமூக ஆர்வலராகவும் பிஸியாக இயங்கி வரும் சாஷா சில மாதங்களுக்கு முன்னர் மிளா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மீடியா வெளிச்சத்துக்கு வந்தார்.

என்ன நடந்தது..மிளா, சாஷா இருவரும் கடின உழைப்பால், பல அவமானங்களை, இன்னல்களை கடந்து பேஷன் டிசைனிங் துறையில் வளர்ந்து வருகின்றனர். ஷகிலா விஷயத்தில் இருவருக்கும் இடையில் பெரிய பிரச்சனை வெடித்தது. என்ன நடந்தது என்பதை மிளா பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.

ஷகிலாவுக்காக அடித்து கொள்ளும் மகள்கள்! - என்ன தான் பிரச்சனை?
இலங்கை : தற்போதைய நிலவரம் என்ன? யார் யார் புதிய அமைச்சர்கள்?
NewsSense

மிளா ஷகிலாவுடன் அவரது வீட்டில் வசித்து வந்தார். மிளாவின் லைஃப் ஸ்டைலும், ஷகிலாவின் லைஃப் ஸ்டைலும் வேறு வேறு என்பதால் ஷகிலாவுடன் சில மன கசப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மிளாவின் சொந்த அக்கா வெளிநாட்டில் இருந்து சென்னை வந்ததை அடுத்து, ஏன் ஷகிலாவின் வீட்டில் வசிக்கிறாய் உனக்கென்று வீடு இல்லையா? என்று கேள்வி எழுப்பினாராம். இதனால் மிளா ஷகிலாவின் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே ஷகிலாவின் மற்றொரு வளர்ப்பு மகளான சாஷா, ஷகிலாவின் வீட்டுக்கு குடியேறியுள்ளார். இருவரும் அம்மா, பேபி என்று கொஞ்சி கொள்ள, மிளாவுக்கு பொசசிவ்னஸ் ஏற்பட்டு ஷகிலாவை விட்டு விலகி இருக்க தொடங்கினார். ஷகிலாவின் இன்ஸ்டா பக்கத்தில் இருந்த மிளாவின் புகைப்படங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, இதனால் மனமுடைந்து போன மிளா, சாஷா தான் இதனை செய்திருப்பார் என பேட்டிகளில் வருத்தத்தை பதிவு செய்து வருகிறார். மேலும் ஷகிலாவின் யூ டியூப் பக்கத்தில் சாஷா உடன் எடுக்கும் வீடியோக்கள் மட்டுமே பதிவாகின்றன. ``சாஷா தெருவில் நின்னப்ப அவங்களுக்கு ஆதரவு கொடுத்து, என் கூட தங்க வெச்சேன். இன்னைக்கு என்னையே சகிலா அம்மாகிட்ட இருந்து பிரிச்சிட்டாங்க. நல்லா இருக்கட்டும்’’ என்று புலம்புகிறார் மிளா.

குக் வித் கோமாளி ரசிகர்களும் ``ஷகிலா மா உங்க பொண்ணு மிளா தான். சாஷா உங்க புகழை யூஸ் பண்ணி ஃபேமஸ் ஆக பாக்குறாங்க. ஏன் மிளாவை விட்டு பிரிஞ்சீங்க’’ என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com