சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு வேறு விதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சினிமா நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
திரைப்படங்களில் நடிக்கும் சிலரை ரீலில் மட்டுமல்லாமல் ரியல் லஃப்பிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்ற எண்ணம் எல்லாருக்கும் தோன்றும். திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் குறித்து இங்கு காணலாம்.
ஷாருக் கான் தனது படங்களிலிருந்து 60 சதவீதம் லாபம் பெறுகிறாராம். அறிக்கைகளின்படி, ஷாருக் கான் தனது படங்களுக்கு ரூ 50 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான பதான் படத்திற்காக நடிகர் ரூ.120 கோடி வசூலித்ததாக டிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 770 மில்லியன் (சுமார் ரூ. 6295.01 கோடி) என்று கூறப்படுகிறது.
தற்போது உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் இருக்கும் ஹாலிவுட் நட்சத்திரங்களான டாம் குரூஸ், ஜார்ஜ் க்ளூனி, ராபர்ட் டி நீரோ போன்ற நட்சத்திரங்களை மிஞ்சியுள்ளார்.
அக்ஷய் குமார் தான் நடிக்கும் படங்களில் பெரும் கட்டணத்துடன் லாபப் பங்கையும் பெறுகிறார்.
அறிக்கையின்படி, நடிகர் தனது கடைசி படமான ராம் சேதுவுக்கு ரூ 50 கோடி வசூலித்துள்ளார். அவர் தனது வரவிருக்கும் படே மியான் சோட்டே மியான் படத்திற்காக தோராயமாக ரூ.135 கோடி வசூலிக்கிறார். 2022 வரை அவரது நிகர மதிப்பு சுமார் $325 மில்லியன் (ரூ. 2660 கோடி) என மதிப்பிடப்பட்டது.
சல்மான் கான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் மட்டுமல்ல, 2016 இல் சுல்தான் படத்தின் மூலம் 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய முதல் இந்திய நட்சத்திரம் என்ற இடத்தையும் பெறுகிறார்.
2017ல் டைகர் ஜிந்தா ஹை படத்திற்காக 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளார்.
அமீர்கான் தனது படங்களுக்கு சுமார் 100-150 கோடி ரூபாய் வசூலிக்கிறார். அதுமட்டுமல்ல, லாபத்தில் 70 சதவீதத்தையும் எடுக்கிறார்.
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி அவரது நிகர மதிப்பு சுமார் 95 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது. இவரது மாதச் சம்பளம் 15 கோடியைத் தாண்டும்.
ரன்வீர் சிங் தனது படங்களுக்காக சுமார் ரூ.30 கோடி வரை வாங்குகிறார். FPJ இல் ஒரு அறிக்கையின்படி, நடிகர் ‘83’ படத்திற்கு 13 கோடி ரூபாய் வசூலித்ததாகவும், படத்தின் வெற்றியின் காரணமாக தற்போது தனது சம்பளத்தை உயர்த்தியதாகவும் கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlus