ரகசிய திருமணமா? நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டது என்ன?

சமீபத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் பேட்டியில் 'ஸ்ருதி ஹாசனின் husband' என சாந்தனுவை குறிப்பிட்டார். அதனால் ஸ்ருதிஹாசன் தனது காதலன் சாந்தனுவை ரகிசியமாக திருமணம் செய்துவிட்டார் என செய்தி பரவ தொடங்கிவிட்டது.
Shruti Haasan
Shruti HaasanInstagram
Published on

தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதி ஹாசன்.

இவர் நடிப்பு, இசை, பாடல் என பன்முக திறமை கொண்டவர் ஸ்ருதி ஹாசன்.

சமீபத்தில் கூட சலார் என்ற படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். சினிமாவில் இப்படி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சில தகவல்கள் பரவி வருகின்றன.

ஸ்ருதி ஹாசன் தனது நீண்ட நாள் காதலன் சாந்தனு ஹசாரிகானுடன் மும்பையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் காதலருடனான புகைப்படங்களை பகிர்ந்து வருவார். ஸ்ருதி ஹாசன்

சமீபத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் பேட்டியில் 'ஸ்ருதி ஹாசனின் husband' என சாந்தனுவை குறிப்பிட்டார். அதனால் ஸ்ருதிஹாசன் தனது காதலன் சாந்தனுவை ரகிசியமாக திருமணம் செய்துவிட்டார் என செய்தி பரவ தொடங்கிவிட்டது.

இதற்கு ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், "எனக்கு திருமணம் ஆகவில்லை, அனைத்தையும் ஓப்பனாக சொல்லும் நான் இதை ஏன் மறைக்க போகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shruti Haasan
”ஹார்மோன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளேன்“ - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடிகை ஸ்ருதிஹாசன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com