சிம்பு
சிம்பு Twitter

"கல்யாணம் கல்யாணம்னு டார்ச்சர் பண்ணாதீங்க" - ஆடியோ லாஞ்சில் சிம்பு பேசியது என்ன?

"நம்ம படம் மாஸா இல்லையான்னு நாமளே பேசக்கூடாது, ரசிகர்கள் தான் பேசனும்" என சிம்பு பேயிருக்கிறார். இது தனுஷ குத்திக்காட்டுவதாக இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து, சிம்பு பேசிய வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு, அவருக்கு போட்டியாளராக கருதப்படும் தனுஷை தாக்கி ஆடியோ லாஞ்ச் நிகழ்வில் பேசியது சர்ச்சையாகியிருக்கிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இவர்கள் கூட்டணியில் ஏற்கெனவே வெளியான அச்சம் என்பது மடமையடா, விண்ணைத் தாண்டி வருவாயா படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களின் பாடல்கள் இப்போதும் பல ஹெட்போன்களில் நிறைந்திருக்கின்றன.

சிம்பு
சிம்பு, தனுஷ், அஜித் : தமிழ் சினிமா முன்னணி ஹீரோக்கள் நடித்த அடல்ட் படங்கள்

சிம்புவுக்கு சினிமாவில் போட்டியாளராக கருதப்படுபவர் தனுஷ். தனது சிறப்பான நடிப்புக்காக தனுஷ் பாராட்டப்படுபவர். ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

தனுஷ் குறித்து சிம்பு படங்களிலும் மேடையில் பேசியதை நாம் அறிவோம். இது போல சிம்பு பற்றி தனுஷும் பேசியிருக்கிறார்.

இப்போது வெந்து தணிந்தது காடு பட ஆடியோ லாஞ்சிலும் தனுஷ் குறித்து சிம்பு பேசியிருக்கிறார்.

முன்னதாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்பட ஆடியோ லாஞ்சில் தனுஷ் திருச்சிற்றம்பலம் ஒரு மாஸ் படம் எனப் பேசியிருந்தார்.

அதனை சுட்டிக்காட்டும் வகையில் "நம்ம படம் மாஸா இல்லையான்னு நாமளே பேசக்கூடாது, ரசிகர்கள் தான் பேசனும்" என சிம்பு பேயிருக்கிறார். சிம்புவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பேசிய சிம்பு, "கல்யாணம் கல்யாணம்னு பிள்ளைங்கள டார்ச்சர் பண்ணாதீங்க. சமூகம் இப்படி அழுத்தம் கொடுக்கறதால பல தப்பான கல்யாணங்கள் நடக்குது. நமக்கு மேல ஒருத்தர் இருக்காரு சரியான நேரத்துல எல்லாமே செய்வாரு" எனப் பேசியிருக்கிறார்.

அத்துடன் ரசிகர்கள் பெற்றோர்களை கைவிடக்கூடாது என்றும் சிம்பு பேசினார்.

சிம்பு
சிம்பு : இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோவர்கள் பெற்ற முதல் தமிழ் நடிகர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com