தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா,   சிவகார்த்திகேயன்
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சிவகார்த்திகேயன் Newssense

4 கோடி ரூபாய் சம்பள பாக்கி, தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் புகார்!

ஜி.வி.பிரகாஷின் ‘ரிபெல்’, விக்ரம் நடிக்கும் ‘சீயான்61’, சிம்பு -கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘பத்து தல’ ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடு செய்வதற்கு தடைவிதிக்கவும் சிவகார்த்திகேயன் கோரிக்கை வைத்துள்ளார்.
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரது அயலான் மற்றும் டான் படங்கள் இந்த ஆண்டு ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் மீது சிவகார்த்திகேயன் புகார் தொடுத்துள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா கடந்த கடந்த 2019ம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து மிஸ்டர் லோக்கல் என்ற படத்தைத் தயாரித்தார். இதில் நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்துக்காக சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் ஆனால் 11 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் சிவகார்த்திகேயன் வசம் தொடுத்துள்ளார். மீதம் 4 கோடி ரூபாயும் அதற்கான டிடிஎஸ் தொகையும் வழங்கவேண்டுமென்றும் சிவகார்த்திகேயன் தரப்பில் கூறப்பட்டுள்ளது

 தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா,   சிவகார்த்திகேயன்
பரியேரும் பெருமாள், குதிரைவால் வரிசையில் பா.ரஞ்சித் தயாரிக்கும் 5 -வது படம்

அதுவரை ஞானவேல்ராஜா தயாரித்துவரும் ஜி.வி.பிரகாஷின் ‘ரிபெல்’, விக்ரம் நடிக்கும் ‘சீயான்61’, சிம்பு -கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘பத்து தல’ ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடு செய்வதற்கும், திரையரங்க வெளியீடு மற்றும் ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடைவிதிக்கவும் சிவகார்த்திகேயன் கோரிக்கை வைத்துள்ளார். சிவகார்த்திகேயன் தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.

 தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா,   சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதியுடன் மோதும் சிலம்பரசன் - ஹன்சிகாவின் "மகா" vs காத்துவாக்குல ரெண்டு காதல்
logo
Newssense
newssense.vikatan.com