Thalaivar 171 : லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் படத்தில் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?

தற்போது லோகேஷ் கனகராஜ் 'தலைவர் 171' படத்தின் ஸ்கிரிப்ட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 'தலைவர் 171' ஒரு தனிப் படமாக இருக்கும் என்றும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்காது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
Thalaivar 171 : லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் படத்தில் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?
Thalaivar 171 : லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் படத்தில் இணைகிறாரா சிவகார்த்திகேயன்? Twitter

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடந்து, அதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ரஜினிகாந்தின் ரசிகர் என்பது பலரும் அறிந்த விஷயம். பல இடங்களில் சிவகார்த்திகேயன் இதனை சுட்டிக்காட்டிருக்கிறார், ரஜினிகாந்த் போல மிமிக்ரி கூட ஆரம்ப காலங்களில் செய்து வந்தார்

ரஜினிகாந்துடன் இணையும் சிவகார்த்திகேயன்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படம் தலைவர் 171' .

இந்நிலையில், கேமியோ பாத்திரத்திற்காக இயக்குநர் சிவகார்த்திகேயனை அணுகியதாகவும், அவர் உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது லோகேஷ் கனகராஜ் 'தலைவர் 171' படத்தின் ஸ்கிரிப்ட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'தலைவர் 170' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்தவுடன், அவர் லோகேஷ் கனகராஜுடன் 'தலைவர் 171' படத்தில் பணியாற்றுவார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கவுள்ளார்.

'தலைவர் 171' ஒரு தனிப் படமாக இருக்கும் என்றும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்காது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

’மாஸ்டர்’, ’மாநகரம்’, 'கைதி', 'விக்ரம்', 'லியோ' போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் 'தலைவர் 171' படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளைத் தொடங்கியுள்ளார்.

Thalaivar 171 : லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் படத்தில் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?
LEO: ”ஒரு டயலாக்கை தூக்கிட்டோம்” லியோவா?பார்த்திபனா? விளக்கம் கொடுக்கும் இயக்குநர் லோகேஷ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com