"நான் ஒரு நாடகம் பார்க்கிறேன்" வைரலாகும் சுப.வீரபாண்டியன் ஃபேஸ்புக் பதிவு

ஒரு கூட்டு குடும்பத்தில் திருமணமாகி செல்லும் இளம் பெண் ஜனனி, அந்த குடும்பத்தில் அடிமைகளாக நடத்தப்படும் பெண்களுக்காக குரல் கொடுக்கிறார். மெல்ல அவள் கொடுக்கும் தைரியத்தில் ஆதிக்கம் செய்யும் ஆண்களை எதிர்க்கின்றனர் வீட்டின் பெண்கள்.
"நான் ஒரு நாடகம் பார்க்கிறேன்" வைரலாகும் சுப.வீரபாண்டியன் ஃபேஸ்புக் பதிவு
"நான் ஒரு நாடகம் பார்க்கிறேன்" வைரலாகும் சுப.வீரபாண்டியன் ஃபேஸ்புக் பதிவுட்விட்டர்
Published on

தான் கடந்த மூன்று மாதங்களாக எதிர்நீச்சல் நாடகம் பார்த்து வருவதாகவும் அது தன்னை மிகவும் ஈர்த்ததாகவும் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பேச்சாளரும் எழுத்தாளருமான சுப. வீரபாண்டியன்.

தொலைக்காட்சி நாடகங்கள் இன்றும் பல வீடுகளில் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்கள் தான் நாடகம் பார்ப்பார்கள் என்பதெல்லாம் அந்த காலம். ஆண்கள், குழந்தைகள் இளசுகள் என எல்லோரையும் கவர்ந்து வருகிறது சீரியல்.

90ஸ் கிட்ஸ்களை கேட்டால், "அம்மி அம்மி அம்மி மிதித்து" என்ற மெட்டி ஒலி டைட்டில் சாங்கில் தொடங்கி கோலங்கள், காதலிக்க நேரமில்லை, சரவணன் மீனாட்சி என நம்மை ஈர்த்த சீரியல்களின் பெயர்களை அடுக்கிக்கொண்டே போகலாம்

அந்த வகையில் தற்போது உள்ள ஆடியன்ஸ்களை மிகவும் ஈர்த்துள்ள நாடகம் என்றால் அது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் தான்.

ரீல்ஸ்களாகவும், யூடியூபில் ஷாட்ஸ்களாகவும், மீம் டெம்பிளேட்களாகவும் எங்கு நோக்கினும் எதிர்நீச்சல் தான்!

ஒரு கூட்டு குடும்பத்தில் திருமணமாகி செல்லும் இளம் பெண் ஜனனி, அந்த குடும்பத்தில் அடிமைகளாக நடத்தப்படும் பெண்களுக்காக குரல் கொடுக்கிறார். மெல்ல அவள் கொடுக்கும் தைரியத்தில் ஆதிக்கம் செய்யும் ஆண்களை எதிர்க்கின்றனர் வீட்டின் பெண்கள்.

தற்காலத்தில், திருமணம், பெண் அடிமைத்தனம், ஆண்களின் ஆளுமையை எதிர்த்து போராடுதல் போன்ற விஷயங்களை கண் முன் காட்சிப்படுத்துவதாலேயே இந்த நாடகத்திற்கு ஃபேன்ஸ் அதிகமாகியுள்ளனர்.

"நான் ஒரு நாடகம் பார்க்கிறேன்" வைரலாகும் சுப.வீரபாண்டியன் ஃபேஸ்புக் பதிவு
அம்மா இந்த தாலிய கழட்டிடவா ப்ளீஸ்! - ஈரமான ரோஜாவே 2 ஹைலைட் காட்சி

இந்நிலையில், இந்த நாடகம் குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார் எழுத்தாளரும், பேச்சாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான சுப.வீரபாண்டியன்.

அவர் தன் ஃபேஸ்புக் பதிவில்,

"கடந்த மூன்று மாதங்களாக நான் ஒரு நாடகத்தைத் தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்த்து வருகிறேன். மற்ற நாடகங்கள் எல்லாம் சரியில்லாதவை என்று அதற்குப் பொருள் இல்லை. இந்த நாடகம் எனக்குப் பிடித்திருக்கிறது என்பதும், இதற்கு மேல் பிற நாடகங்களைப் பார்ப்பதற்கு எனக்கு நேரம் கிடைப்பதில்லை என்பதும்தான் உண்மை!

நான் தொடர்ந்து பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல், கூட்டங்களுக்குப் போய்விட்டு இரவு தாமதமாக வரும் போது மனைவியிடம் நடந்த கதையைக் கேட்டும் தெரிந்து கொள்கிற ஒரு நாடகம் உண்டு! அந்த நாடகத்தின் பெயர் "எதிர்நீச்சல்"!

அந்த நாடகம் வீட்டினிலே பெண்களைப் பூட்டி வைக்கும் மடமையை எதிர்த்துக் கதை சொல்கிறது! பெண்கள் ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்னும் தெளிவைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஆண்களை விட அறிவிலும ஆற்றலிலும் உயர்ந்து நிற்கும் பெண்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் என்னும் உண்மையை ஒவ்வொருவர் மூளையிலும் உரைக்கிற மாதிரிச் சொல்கிறது!

எனவே எனக்கு அந்த நாடகம் மிகவும் பிடித்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல், அந்தக் கதையைச் சொல்லும் அழகு, நாடகத்தின் விறுவிறுப்பு, உரையாடல்களின் கூர்மை, பட்டுத் தெறிக்கும் நகைச்சுவை என்று பல்வேறு செய்திகள் பார்க்கின்றவர்களை ஈர்கின்றன!

மறந்துவிடாமல் இன்னொன்றைச் சொல்ல வேண்டும். அந்த நாடகத்தில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பு, அத்தனை அருமையாக இருக்கிறது! அவர்களின் குரல்கள் மட்டும் இல்லாமல், முகம் பேசுகிறது, கண்கள் பேசுகின்றன, நடை உடை பாவனைகள் கூட நடிப்பை வெளிப்படுத்துகின்றன!

நாடகத்தின் இயக்குனர் திருச்செல்வம், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் அனைவரையும் நாம் பாராட்ட வேண்டும்!" என்று பதிவிட்டிருந்தார்.

இவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது

"நான் ஒரு நாடகம் பார்க்கிறேன்" வைரலாகும் சுப.வீரபாண்டியன் ஃபேஸ்புக் பதிவு
ஈரமான ரோஜாவே 2 : ப்ரெண்டான பிரியா! கடுப்பான காவ்யா - குழம்பும் ரசிகர்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com