பொன்னியின் செல்வன் : பழையாறை கோவிலின் சிறப்புகள் என்ன?

முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு என அழைக்கபட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை என்று அழைக்கப்பட்டது. அதன் வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது
பழையாறை
பழையாறைTwitter
Published on

“அரிசிலாற்றுக்குத் தென் கரையில் நின்று அந்நகரைப் பார்ப்போம். அடடா! வெறும் நகரமா இது? தமிழ்த்தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல அல்லவா விளங்குகிறது? பச்சை மரகதங்களும், சிவந்த ரத்தினங்களும், நீலக்கற்களும் பதித்த நெற்றிச் சுட்டியைப் போல அல்லவா திகழ்கிறது!

நதிகளும் ஓடைகளும் தடாகங்களும் கழனிகளும் புது நீர் நிறைந்து ததும்புகின்றன. அவற்றில் பல வர்ண மலர்கள் பூத்துத் திகழ்கின்றன. தென்னை மரங்களும் புன்னை மரங்களும் குளிர்ச்சியான பசுமையைப் பரப்புகின்றன. இவ்வளவுக்கும் இடையிடையே விண்முட்டும் மணி மாடமாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளிவீசுகின்றன.

அப்பப்பா! பழையாறை என்னும் இந்த ஒரு பெரும் நகரத்துக்குள்ளே எத்தனை சிறிய ஊர்கள்? நந்திபுர விண்ணகரம், திருச்சத்தி முற்றம், பட்டீச்சுரம், அரிச்சந்திரபுரம் முதலிய ஊர்களும் அந்த ஊர்களின் ஆலயங்களும் இந்தப் பழையாறை என்னும் சோழர் தலைநகரில் அடங்கியுள்ளன. பழையாறையின் நாலு திசைகளிலும் வடதளி, கீழ்த்தளி, மேற்றளி, தென்தளி என்னும் நாலு சிவனார் கோயில்கள் இருக்கின்றன. போர் வீரர்கள் குடியிருக்கும் ஆரியப் படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு, பம்பைப்படை வீடு ஆகிய நாலு வீரபுரிகள் காணப்படுகின்றன. இவ்வளவுக்கும் நடுநாயகமாகச் சோழ மாளிகை என்றால், ஒரே மாளிகையா? விஜயாலய சோழருக்கு முன்னால் இது ஒரு தனி மாளிகையாக இருந்தது. பிறகு ஒவ்வொரு அரசகுமாரனுக்கும் ஒவ்வொரு இளவரசிக்குமாகப் பழைய சோழ மாளிகையையொட்டிப் புதிய புதிய மாளிகைகள் எழுந்து நிற்கும் காட்சியைக் காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். வர்ணிப்பதற்கோ பதினாயிரம் கவிஞர்களின் கற்பனாசக்தி போதாது “. – பொன்னியின் செல்வன். பழையாறை!

வாசிக்கும் பழக்கமுடையோர் நிச்சயம் வாழ்வில் இதைப் படித்து வந்திருப்பீர்கள். ஆம். பொன்னியின் செல்வன் நாவலின் பழையாறை பகுதியில் வரும் வரிகள் இவை. இவற்றில் சொல்லப்பட்டிருக்கும் இடங்களும் வரிகளும் அப்படியே நம்மை அந்த இடத்திற்கே அழைத்துச்சென்றுவிடும். ஏன் பலபேரும் பயணம் மேற்கொண்டு அதில் சொல்லப்பட்ட இடங்களும் ஊர்களுக்கும் சென்று வந்திருக்கின்றனர். இவ்விடத்திற்கு ஏற்கனவே வந்திருக்கிறோமோ என்ற உணர்வு பலருக்கும் மேலோங்கியிருக்கிறது. இங்கு வாழ்ந்தோமா? நடந்தோமா? இருந்தோமா என்றெல்லாம் நிச்சயம் உணர்ந்து பிரமித்து நின்றோர் பலர். இந்த வரலாற்றுப் புதினத்தில் மட்டுமல்ல.. வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமான பழையாறை எங்கே உள்ளது? பார்க்கலாம் வாருங்கள்.

பழையாறை
பொன்னியின் செல்வன் : ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோயிலின் அட்டகாச புகைப்படங்கள்

பழையாறை

தலத்தின் பெயர் : சோமேஸ்வரர் திருக்கோவில் பழையாறை

இறைவனின் பெயர் : சோமேஸ்வரர்

இறைவியின் பெயர் : லோகாம்பிகை நாயகி

தல மரம் :

நெல்லி

வழிபட்டோர்:

கருடன், ஆதிசேஷன்

இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் - பழையாறை நகர் என்றும், 8-ஆம் நூற்றாண்டில் - நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டில் - முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூரின் தெற்கிலும் வடக்கிலும் முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு என அழைக்கபட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை என்று அழைக்கப்பட்டது. அதன் வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது

பழையாறை என்பது நான்கு சிறு பிரிவுகளைக்கொண்டது.

1. வடதளி:- (தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் , அப்பர் பெருமான் உண்ணாவிரதமிருந்த இடம். உள்ளது)

2. மேற்றளி,

3. கீழ்த்தளி (பழையாறை),

4. தென்தளி

பழையாறை
ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோயில் குறித்த 10 தகவல்கள்

தல வரலாறு

முன்னொரு காலத்தில் கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்கத் தேவேந்திரனிடம் அமிர்த கலசம் பெற்று இத்தலத்தின் வழியே வரும்போது அசுரர்கள் இதைக்கண்டு கருடனுடன் சண்டை மூண்டது. குடத்திலிருந்து மூன்று துளிகள் நெல்லி வனமான இத்தலத்தில் சிந்தின. அத்துளிகள் சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் ஆகிய மூன்றாயின.

கருடன் தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டு அருள்பெற்றார் கருடன் தனியே தன்பெயரால் உண்டாக்கிய தீர்த்தம் சடாயு தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.

ஆலய சிறப்புகள்

பழையாறை சோமேஸ்வரர் கோவில் சோழர் காலத்துச் சிற்பப் பணிக்கு முன்னுதாரணமாக விளங்கியது. இக்கோவில் வாயில் சுவரும், சுவரில் உள்ள சிற்ப வடிவங்களும் பார்க்கப் பார்க்க திகட்டாத அழகுடன் அமைந்துள்ளன.. கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள் அம்பாள் லோகாம்பிகை. உள் பிரகாரத்தில் நுழைந்தவுடன் முன் மண்டபத்தில் மூலவர் சோமேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. அத்தனை மன்னர்களையும் மக்களையும் கண்ட சோமேஸ்வரர் இன்றும் அமைதியும் தெய்வீகமும் சூழ அருள் பாலிக்கிறார். அருகில் அர்த்த மண்டபத்தில் உள்ள துர்க்கை கம்பீரப்பொலிவுடன் காலூன்றி நிற்கிறாள்.

* அப்பர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:

* சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கிய தலம்.

* பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை. பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாக ஆயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம் "சோழமாளிகை" என்னும் தனி ஊராக உள்ளது.

சோழர்கள்
சோழர்கள்Twitter

* தேவார காலத்தில் 1. முழையூர், 2. பட்டீச்சரம், 3. சத்திமுற்றம், 4. சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படைகளாக விளங்கின என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

* சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணா நோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் இந்த சோமநாதீஸ்வர்

* இங்குள்ள (சோம தீர்த்தம்) தீர்த்தக் குளத்துநீர் சித்தபிரமை முதலியவற்றை போக்கவல்லது என்று நம்பப்படுகிறது.

* மங்கையர்க்கரசியார், அமர்நீதி நாயனார் அகியோர் அவதரித்த பதி.

* மங்கையர்க்கரசியார் என்பவர் மணிமுடிச் சோழனின் மகள் என்றும் கூறுவர்.

பழையாறை
பொன்னியின் செல்வன் : அருள்மொழியா? அருண்மொழியா? - மகுடேஸ்வரன் சொல்வது என்ன?

* இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது. குடந்தை அருகேயுள்ள திருநறையூர் எனும் நாச்சியார் கோவிலில் உள்ள சித்தநாதஸ்வாமி திருக்கோவிலுள்ள ராஜராஜரின் கல்வெட்டொன்றில் பழையாறையில் இருந்த அருமொழிதேவ ஈஸ்வரம் கோவிலுக்குரிய தேவதான ஊரைப் பற்றி விளக்குகிறது. பழையாறை கீழ்தளியான சோமேஸ்வரர் ஆலயம், கோபுரங்கள் இடிந்த நிலையில் உள்ளன. புது ஆலயங்களைக் கட்டுவித்துப் போற்றுதலை விட, வரலாற்றுச் சிறப்பு மிக்க இது போன்ற ஆலயங்களைப் பாதுகாத்துப் புதுப்பித்துப் பராமரித்தால் இன்னும் நன்றாக இருக்கும். வரலாறு அடுத்த தலைமுறைக்கும் சென்றடையும். இக்கோவிலை முதலாம் குலோத்துங்கன் அல்லது விக்கிரம சோழர் கட்டுவித்திருக்கலாம் என இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.

மேலும் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களையும் தொடர்ந்து காணலாம்.

பழையாறை
Ponniyin Selvan Teaser : மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இதோ!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com