சுஷ்மிதாவை மணந்தாரா லலித் மோடி? டிவிட்டரில் விளக்கம்

லலித் மோடி மற்றும் சுஷ்மிதா சென் மாலத்தீவில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படங்களை லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
Lalit Modi
Lalit ModiTwitter

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியும், பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் - வும் டேட் செய்து வருவதாக லலித் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீகின் முன்னாள் தலைவராக இருந்தவர் லலித் மோடி. இவர் 2005 ஆம் ஆண்டு முதல் 2010 வரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். பின்னர் இவர் மீது தொடுக்கப்பட்ட வரி ஏய்ப்பு, நிதி முறைகேடுகள், பணமோசடி காரணங்களால் இவர் மீது சிபிஐ, வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனால் லண்டன் தப்பி சென்றார் லலித் மோடி.


இந்நிலையில், லலித் மோடி மற்றும் சுஷ்மிதா சென் மாலத்தீவில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படங்களை லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Lalit Modi
சுஷ்மிதா சென் - ஆறாவது காதல் பிரிவு

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனரோ என்ற கேள்விகளை எழுப்பத் துவங்கினர். நேற்று முதல் டிவிட்டரில் #LalitModi #SushmitaSen என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருந்தது.


இதற்கு விளக்கமளிக்கும் விதமாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் இருவரது புகைப்படங்களைப் பகிர்ந்த லலித் மோடி, "திருமணம் ஆகவில்லை...நாங்கள் டேட் செய்துகொண்டிருக்கிறோம்...நிச்சயம் ஒரு நாள் திருமணமும் நடைபெறும்" என்று பதிவிட்டிருந்தார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது முன்னாள் காதலன் ரோமன் ஷாலை பிரிந்தார் சுஷ்மிதா. மேலும், சமீபத்தில் பங்கேற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், சுஷ்மிதா தான் இதுவரை திருமணம் செய்துகொள்ளாததற்குக் காரணம் தெரிவித்திருந்தார்.

மூன்று முறை திருமணம் செய்யும் அளவிற்கு சென்ற தன்னை கடவுள் தான் காப்பாற்றினர் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Lalit Modi
Sushmita Sen: 28 years since 1st 'Miss Universe'- a lookback on Sen| Visual Story

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com