பேரன்பு : பெண்ணின் ஆடையில் தப்பு - சர்ச்சையில் சிக்கிய சீரியல்

பெண்கள் அணியும் உடைகளை வைத்து தான் ஆண்கள் அவர்களை கேலி செய்கிறார்கள் என்ற வசனம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலில் இடம்பெற்று இணையதளத்தில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
Vaishnavi
VaishnaviTwitter

பெண்கள் வீடுகளுக்குள், அடுப்படியில் மட்டுமே காலந்தள்ளிக் கொண்டிருந்த சூழ்நிலையை உடைத்தெறிந்து படிப்பு, சுதந்திரம், வேலை, சொத்து என அனைத்திலும் தங்களுக்கான இடங்களைப் பல வருடங்களாகப் போராடி பெற்றிருக்கின்றனர். இன்றும் சிலருடைய கண்ணோட்டம், ஒரு பெண் ஒரு ஆணுக்கு அடிமையானவள், கணவர்களுக்கும், குடும்பத்திற்கும் சேவைகள் செய்ய மட்டுமே படைக்கப்பட்டவள் என்ற எண்ணம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

நடை, உடை, பாவனை, படிப்பு, தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் என, தனி மனித சுதந்திரத்தை மெல்ல மெல்ல பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், ஒரு பெண்ணின் உடைகளை வைத்து தான் ஒரு ஆண் அல்லது இந்த சமூகம் அவளை மதிப்பிடுகிறது என்ற ஒரு பொதுப்படையான கண்ணோட்டமும் பெரிதளவில் நிலவி வருகிறது. அதை எதிர்த்து, சமகால ஆண்கள், பெண்கள், ஏன், முந்தய தலைமுறையினரும் பலர் குரல் கொடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும், பேரன்பு என்ற தொடரின் நாயகி தன்னோடு பயணிக்கும் மற்றுமொரு பெண்ணை ஆண்கள் கேலி செய்வது அவர் அணிந்திருக்கும் ஆடையினால் தான் என குறிப்பிட்டது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

விஜய் டீவியில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் தங்கை வேடத்தில் நடித்த வைஷ்ணவி, இந்த பேரன்பு தொடரில் நாயகி ஆகியிருக்கிறார். தாயின் கட்டாயத்தினால், ஆதரவற்ற ஹீரோயினை மணம் புரிகிறார் ஹீரோ கார்த்திக் (விஜய் வெங்கடேசன்). கணவனின் அன்பைப் பெறப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மாமியார் ராஜேஸ்வரியின் செல்லமாக வலம் வரும் ஹீரோயின் வானதி, கணவனின் காதலை வெல்கிறாரா என்பது தான் கதையின் கரு.

இந்த தொடரில், சமீபத்தில் வெளியான எபிசோடில் இடம்பெற்ற ஒரு காட்சி, அதில் வந்த ஒரு அர்த்தமற்ற வாசகம் சர்ச்சைக்குரிய விவாதமாய் மாறியிருக்கிறது.

Vaishnavi
VaishnaviTwitter
Vaishnavi
ஈரமான ரோஜாவே 2 : புகுந்த வீட்டில் சுயரூபத்தை காட்டும் காவ்யா - சூடுபிடிக்கும் சீரியல்

அப்படி என்ன சொல்லிவிட்டார்கள் இந்தளவு இணையம் கொதித்தெழ?

இத்தனைக்கும் அந்த பெண் அணிந்திருப்பது புடவையே! இந்த நல்ல, செல்ல மருமகள் அணிந்திருப்பதும் புடவையே. ஆனால், அந்த பெண் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்திருந்தார் என்பது தான் இங்கு வன்மமாக சொல்லப்படுகிறது.

இதன் வீடியோ க்ளிப்பை பாடகி சின்மயீ தன் ட்விட்டரில், வழக்கம்போல பகிர்ந்து குரலெழுப்பியிருந்தார். இவ்வாறான ஒரு வாசகத்தை எழுதிய வசனகர்த்தா, அதை ஏற்றுக்கொண்ட இயக்குநர், இந்த தொடரைப் பார்ப்பவர்கள் என்ன மாதிரியான மனநிலையை கொண்டுள்ளார்கள்?

அவர்கள் வீட்டுப் பெண்களின் கதி என்ன?

இது எல்லாவற்றையும் விட, அதை ஒப்புக்கொண்டு பேசிய அந்த நாயகியும் பெண் தானே? இதை பற்றிய உங்கள் கருத்து?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.


Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.


Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com


Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com