LEO - Bloody Sweet: இது தான் தளபதி படத்தின் புதிய டைட்டில்! வீடியோ வெளியிட்டது படக்குழு

கடந்த முன்று நாட்களாக ட்விட்டரில் சரமாரியாக அப்டேட் கணைகளை தொடுத்து வருகிறது படக்குழு. அதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை, பிப்ரவரி 3 ஆம் தேதி தளபதி 67ன் தலைப்பு வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வந்தது.
LEO - Bloody Sweet: இது தான் தளபதி படத்தின் புதிய டைட்டில்! வீடியோ வெளியிட்டது படக்குழு
LEO - Bloody Sweet: இது தான் தளபதி படத்தின் புதிய டைட்டில்! வீடியோ வெளியிட்டது படக்குழுட்விட்டர்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு LEO - Bloody Sweet என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் வெளியாகிறது படம். அக்டோபர் 19 ஆம் தேதி படம் வெளியாகும் எனவும் டைட்டில் ரிவீல் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரம் திரைப்படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.

இவர் நேர்காணல்களில், ஹாலிவுட்டில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்று ஒன்று இருப்பது போல, தமிழிலும் ஒரு யுனிவெர்ஸ் உருவாக்கவுள்ளதாக கூறியிருந்தார். அதற்கு லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் - LCU என்று பெயரும் சூட்டியுள்ளார்.

இந்த எல்சியூவில் இதுவரை இரண்டு படங்கள் இடம்பெற்றுள்ளன. கார்த்தி நடித்த கைதி மற்றும் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜய்யுடன் கைக்கோர்க்கிறார் லோகேஷ் கனகராஜ். விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன் என நட்சத்திரப் பட்டாளமே இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றுள்ளது

LEO - Bloody Sweet: இது தான் தளபதி படத்தின் புதிய டைட்டில்! வீடியோ வெளியிட்டது படக்குழு
Thalapathy67: ”இது 100% என்னோட படம்” - விஜய் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்

கடந்த முன்று நாட்களாக ட்விட்டரில் சரமாரியாக அப்டேட் கணைகளை தொடுத்து வருகிறது படக்குழு. அதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை, பிப்ரவரி 3 ஆம் தேதி தளபதி 67ன் தலைப்பு வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வந்தது.

இந்நிலையில், தளபதி 67க்கு ’LEO - Bloody Sweet’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படமும் லோகேஷின் சினிமாட்டிக் யுனிவெர்ஸுக்குள் வருமா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது

LEO - Bloody Sweet: இது தான் தளபதி படத்தின் புதிய டைட்டில்! வீடியோ வெளியிட்டது படக்குழு
தளபதி 67? கைதி 2? சமூக வலைத்தளங்களிலிருந்து விலகிய லோகேஷ் - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com