Thalapathy 68: 20 ஆண்டுகளுக்கு பின் இணையும் யுவன் - விஜய்; வந்தது அடுத்த படத்தின் அப்டேட்!

மங்காத்தா திரைப்படம் வெளியான பிறகு, டின்னருக்கு வரவழைத்து தன்னை வெகுவாக பாராட்டியதாக வெங்கட் பிரபு பகிர்ந்திருந்தார். மேலும், "என்னிடம் கேட்டிருந்தால், நடிகர் அர்ஜுனின் கதாபாத்திரத்தில் நானே நடித்திருப்பேன்" என்று கேட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
Thalapathy 68: 20 ஆண்டுகளுக்கு பின் இணையும் யுவன் - விஜய்; வந்தது அடுத்த படத்தின் அப்டேட்!
Thalapathy 68: 20 ஆண்டுகளுக்கு பின் இணையும் யுவன் - விஜய்; வந்தது அடுத்த படத்தின் அப்டேட்!ட்விட்டர்
Published on

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கும் அடுத்தப்படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் விஜய். இது குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையமைக்கவுள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் இதுவரை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்ததில்லை. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான இவரது மங்காத்தா திரைப்படத்தை பார்த்த பிறகு, நடிகர் விஜய் தன்னுடன் இணைந்து படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியதாக பேட்டி ஒன்றில் முன்னர் கூறியிருந்தார் வெங்கட் பிரபு.

மங்காத்தா திரைப்படம் வெளியான பிறகு, டின்னருக்கு வரவழைத்து தன்னை வெகுவாக பாராட்டியதாக வெங்கட் பிரபு பகிர்ந்திருந்தார். மேலும், "என்னிடம் கேட்டிருந்தால், நடிகர் அர்ஜுனின் கதாபாத்திரத்தில் நானே நடித்திருப்பேன்" என்று கேட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Thalapathy 68: 20 ஆண்டுகளுக்கு பின் இணையும் யுவன் - விஜய்; வந்தது அடுத்த படத்தின் அப்டேட்!
”Vijay Uncle என்னைய பாக்க வாங்க”- அடம்பிடிக்கும் குழந்தைக்கு Video Call பேசிய நடிகர் விஜய்

மற்றொரு தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர், நடிகர் விஜய்யை இம்ப்ரெஸ் செய்யக்கூடிய கதையை தயார் செய்துகொண்டிருக்கிறேன். அப்படி ஒரு கதை அமைந்துவிட்டால், நிச்சயமாக அது நடந்துவிடும். நானும் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு இருக்கிறேன். அவருடன் பணியாற்றுவது மிகவும் நல்ல அனுபவமாக இருக்கும், விரைவில் நடக்கும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கல்பாத்தி எஸ் அகோரம், ஏ ஜி எஸ் என்டெர்டெயின்மென்ட்டின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். ஏ ஜி எஸின் 25வது படமான இது இதுவரை தயாரித்ததிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளது

வெங்கட் பிரபு படம் என்றாலே இசைக்கு யுவன் தானே? யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு. புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு, 20 ஆண்டுகள் கழித்து இணைகிறது விஜய் - யுவன் காம்போ. இதனால் ரசிகர்கள் மத்தியில் பேர் எதிர்பார்ப்பு உள்ளது

Thalapathy 68: 20 ஆண்டுகளுக்கு பின் இணையும் யுவன் - விஜய்; வந்தது அடுத்த படத்தின் அப்டேட்!
Vijay: தமிழ் சினிமாவில் Highest paid நடிகர் விஜய் - சம்பளம் ரூ.200 கோடியா? உண்மை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com