Vijay: இயக்குனராக அறிமுகமாகும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் - லைகா நிறுவனம் பகிர்ந்த ட்வீட்

விஜய்யின் மகன் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் என்ற செய்திகள் சமீப காலமாக வலம் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், அவர் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்
Vijay: இயக்குனராக அறிமுகமாகும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் - லைகா நிறுவனம் பகிர்ந்த ட்வீட்
Vijay: இயக்குனராக அறிமுகமாகும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் - லைகா நிறுவனம் பகிர்ந்த ட்வீட்ட்விட்டர்
Published on

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரின் மகன் விஜய். இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.

விஜய்யின் மகன் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் என்ற செய்திகள் சமீப காலமாக வலம் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், அவர் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்

ஜேசன் சஞ்சய் இயக்குனராக விரும்புகிறார் என்று எஸ் ஏ சி பல முறை நேர்காணல்களில் கூறியது உண்டு.

தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் ஜேசன். லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் ஜேசன் ஒப்பந்தம் செய்துகொண்ட புகைப்படங்களை அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

"ஜேசன் சஞ்சய்யை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். அவரது பயணத்தில் வெற்றி கண்டு, பெருமையை முன்னெடுத்து செல்ல வாழ்த்துகிறோம்” என்று பதிவிட்டிருந்தது லைகா நிறுவனம்

Vijay: இயக்குனராக அறிமுகமாகும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் - லைகா நிறுவனம் பகிர்ந்த ட்வீட்
"விஜய் அண்ணா பயிலரங்கம் தொடங்கியிருப்பது போதாது" - என்ன பேசினார் கார்த்தி?

ஜேசன் சஞ்சய் டொரண்டோ ஃபில்ம் ஸ்கூலில் திரைப்படம் தயாரிப்பில் டிப்ளொமா பட்டமும், லண்டனில் BA Honors in Screenwriting படிப்பையும் முடித்துள்ளார். மேலும் இவர் புல் தி ட்ரிக்கர் என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

தனது இந்த திரைப்பயணத் தொடக்கத்தை பற்றி பேசிய சஞ்சய், லைகா நிறுவனத்துடன் முதல் படத்தை தொடங்குவதற்கு பெருமைக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் வளர்ந்து வரும் நடிகர்களை இப்படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முன்னணி டெக்னீஷியன்களுடனும் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது எனவும் கூறினார்.

இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

Vijay: இயக்குனராக அறிமுகமாகும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் - லைகா நிறுவனம் பகிர்ந்த ட்வீட்
Vijay: "நான் அரசியலுக்கு வந்த பின்..." - நிர்வாகிகளிடம் விஜய் பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com