சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' FDFS பார்க்க வந்த சங்கீதா விஜய் - ஓ இதுதான் காரணமா?

சங்கீதா மாவீரன் படத்திற்கு வந்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தியேட்டரில் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தியை சந்தித்த சங்கீதா, அவரது கையை பிடித்துக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்துள்ளார்.
Thalapathy Vijay's Wife Sangeetha Went To "Maveeran" FDFS
Thalapathy Vijay's Wife Sangeetha Went To "Maveeran" FDFS Twitter
Published on

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது.

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

தன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்க்க சிவகார்த்திகேயன் திரையரங்கம் வந்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா மாவீரன் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க திரையரங்கம் வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் காரில் இருந்து இறங்கும் சங்கீதா மாஸ்க் அணிந்து கொண்டு தியேட்டர் உள்ளே செல்கிறார்.

சமீப காலமாக விஜய்யின் எந்த பொது நிகழ்விலும் மனைவி சங்கீதாவை பார்க்க முடியவில்லை. இதனால் இருவரும் பிரிந்துவிட்டனர். விஜய் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போகிறார் என்று தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவல் வெறும் வதந்தி என்று மறுத்த விஜய் தரப்பு சங்கீதா குழந்தைகளை பார்த்துக்கொண்டு வெளிநாட்டில் தங்கியுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

Thalapathy Vijay's Wife Sangeetha Went To "Maveeran" FDFS
Vijay: தமிழ் சினிமாவில் Highest paid நடிகர் விஜய் - சம்பளம் ரூ.200 கோடியா? உண்மை என்ன?

சங்கீதா மாவீரன் படத்திற்கு வந்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தியேட்டரில் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தியை சந்தித்த சங்கீதா, அவரது கையை பிடித்துக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்துள்ளார்.

நடிகர் விஜய்யின் குடும்பமும் இயக்குநர் ஷங்கரின் குடும்பமும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அதிதி ஷங்கருக்காக சங்கீதா வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதிதி ஷங்கர் அறிமுகமான விருமன் படம் பார்க்கவும் சங்கீதா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay's Wife Sangeetha Went To "Maveeran" FDFS
அரசியலில் நடிகர் விஜய்? இதற்கான விதை இந்த படத்தின் போதே துவங்கியதாம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com