இன்றைய நாளில் சமூக ஊடகங்களில் பேசும் பொருளாக இடம்பிடித்திருப்பது நடிகர் விஜய் செய்த விஷயங்கள் தான். தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதி முதல் மூன்று மதிப்பெண்களை எடுத்த ஒவ்வொரு தொகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஊக்கப்பரிசு வழங்கி இருக்கிறார் நடிகர் விஜய்.
அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்த சில சூசகமான கருத்துக்களை மறைமுகமாக கூறி இருந்தார்.
தனது நடிப்பின் மூலம் குழந்தைகளின் மனதைக் கவர்ந்த விஜய் தனது பேச்சு மூலம் வருங்கால அரசியலுக்கான விதையையும் விதைத்துள்ளார். இவரது பேச்சு தான் இப்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சமீப காலமாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருப்பதாகவும், அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் சில தகவல்கள் அரசல் புரசலாக வந்து கொண்டு இருக்கிறது.
புலி வருகிற கதையாட்டம் என்னப்பா சொன்னதையே சொல்லிட்டு இருக்கீங்க என்று சிலர் நினைத்தாலும் கூட, இந்த புலி அரசியலில் பாய்வதற்கு முன்னால் பதுங்கிய கதையெல்லாம் இப்போது தான் வெளியே வந்திருக்கிறது. அதாவது, நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை தனது ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் இயக்க பணிகள் மூலம் துவங்கினார்.
ஆரம்பத்தில் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்திய விஜய் 'காவலன்' திரைப்படத்திற்குப் பிறகு அரசியல் களத்தில் மறைமுகமாக இறங்கினார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த 'காவலன்' திரைப்படத்திற்கான தொலைக்காட்சி உரிமம் பெறுவதில் சில அரசியல் தலையீடுகள் இருப்பதை கண்டுபிடித்தார் விஜய்.
இந்த சிக்கல்களை சமாளித்து வெளியே வந்த அவர், தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுடன் சந்திப்பை மேற்கொண்டார். தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது அதிமுக கட்சிக்கு ஆதரவாக களத்தில் இறங்கினார். இப்படி அவ்வப்போது அரசியலில் தலை காட்டி வந்த நடிகர் விஜய் தனது 'துப்பாக்கி' திரைப்பட வெளியீட்டின் போது பெரிய சிக்கலை சந்தித்தார்.
இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த போதும் கூட அவற்றை எல்லாம் தாண்டி 'துப்பாக்கி' படம் தியேட்டர்களில் வெளியாகி வசூலைக் குவித்தது. அடுத்ததாக, 'தலைவா' படத்திற்கான இசை வெளியீட்டின் போது தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்க திட்டமிட்ட விஜய் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
இந்த படத்தை வெளியிடுவதற்கும் சிக்கல்களை சந்தித்த அவர் மீண்டும் தனது அரசியல் பிரவேசத்தை தள்ளிப்போட்டார். அதே போல, 'கத்தி' திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்ததால் சில போராட்டங்களை எதிர்கொண்டார் விஜய். இருப்பினும், தடைகளைத் தாண்டி வெளியான இந்த படம் விவசாயிகளின் பிரச்னைகள் மற்றும் கார்ப்பரேட் ஆதிக்கங்களை பற்றி பேசி இருந்தது.
இயக்குனர் அட்லீயின் 'மெர்சல்' திரைப்படத்தில் அரசியலைப் பேசிய இருந்த விஜய் தனது 'சர்க்கார்' திரைப்படத்தில் ஒரு விரல் புரட்சியையே ஏற்படுத்தி இருந்தார். இந்த நேரத்தில், விஜய் தனது மக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் அரசியல் கட்சிக்கு இணையாக மகளிர் அணி, மாணவர் அணி போன்றவற்றை துவங்கினார்.
இப்படி அவ்வப்போது, அரசியலில் எட்டிப் பார்த்து வந்த விஜய் தற்போது சினிமாவில் தீவிர ஆர்வம் செலுத்தி இருக்கிறார். அந்த வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் தனது 70 ஆவது திரைப்படத்திற்கு பிறகு முழு மூச்சாக அரசியலில் களம் காணுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. எது எப்படியோ, விஜயின் அரசியலில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust