The Kerala Story : மே 5ல் வெளியாக இருக்கும் படம்; தடை செய்ய வலுக்கும் எதிர்ப்புகள் - ஏன்?

‘தி கேரளா ஸ்டோரி'. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
The Kerala Story an attempt to spread hate propaganda, says Pinarayi Vijayan
The Kerala Story an attempt to spread hate propaganda, says Pinarayi VijayanTwitter
Published on

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி கேரளா ஸ்டோரி'. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

முன்னணி கதாபாத்திரத்தில் அதா ஷர்மா, சித்தி இட்னானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அதில் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் அழைத்துச் செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மே-5ஆம் தேதி ‘தி கேரளா ஸ்டோரி' வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கு தடை விதிக்குமாறு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இது குறித்து கூறியதாவது,

”மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக ‘தி கேரளா ஸ்டோரி' இந்தி படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளது.

சங் பரிவாரின் கொள்கையை பிரச்சாரம் செய்ய எடுக்கப்பட்ட படம் தான் இது. கேரள மாநில தேர்தலின்போது அரசியலில் ஆதாயம் அடைய சங் பரிவார் அமைப்புகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.

The Kerala Story an attempt to spread hate propaganda, says Pinarayi Vijayan
”ரஜினிகாந்த் இப்போ ஜீரோ ஆகிட்டாரு” கொந்தளித்த ரோஜா - என்ன பேசினார்?

நீதிமன்றம், மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்த ‘‘லவ் ஜிஹாத்’’ குற்றச்சாட்டுகளை படத்தில் கொண்டுவந்துள்ளனர். சமீபத்தில் கூட லவ் ஜிஹாத் என்ற ஒன்றே கிடையாது என்று மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில் கேரளாவில் மதநல்லிணக்கத்தை அழித்து, பிரிவினைவாதம் என்ற விஷ விதையை விதைக்க சங்பரிவார் முயற்சித்து வருவது கண்டிக்கத்தக்கது” இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

The Kerala Story an attempt to spread hate propaganda, says Pinarayi Vijayan
Manimegalai : லவ் ஜிஹாத் வதந்திக்கு தரமான பதிலடி கொடுத்த மணிமேகலை - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com