சமீபத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
இந்த படத்தில் மிடில் கிளாஸ் பையனாக அசத்தியிருப்பார் தனுஷ். கிரே மேன் போன்ற ஆக்ஷன் படங்களில் நடித்திருந்தாலும் சாதாரண பக்கத்துவீட்டு பையன் கதாபாத்திரத்துக்கு சட்டென பொருந்திவிட்ட தனுஷை ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்த படத்தில் தனுஷை விட அதிக ஸ்கோர் செய்தது நித்யா மேனன் தான். நண்பர்களாக இருந்து பின்னாளில் காதலாக மாறும் சாதாரண கதை தான் என்றாலும் தனது குறும்புத் தனத்தால் அனைவரையும் ஈர்த்திருப்பார் நித்யா.
ரசிகர்கள் நித்யாவை மெச்சித்து வரும் சூழலில் சிலர் படத்தில் வரும் தாய்கிழவி பாடலை முன்னிட்டு அவரை சமூக வலைத்தளங்களில் தாய்கிழவி என்று அழைத்து வருகின்றனர்.
அனிரூத் இசையில் அந்த பாடலை தனுஷ் எழுதி அவரே பாடியும் இருந்தார். படத்தின் முதல் பாடலாக வெளியான இதற்கு ரீல்ஸில் குழந்தைகள் குத்தாட்டம் போட்டனர்.
என்னதான் பாடல் வெற்றி பெற்றிருந்தாலும் அந்த பாடலில் வரும்படி அழைப்பது தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார் நித்யா மேனன்.
தனது சமூக வலைத்தள பக்கத்தில் நேரலையில் தோன்றியவர் தன்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம் என்றும் அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust