எதிர்நீச்சல்: மீண்டும் வரும் ஆதி குணசேகரன்! புதிய AGS பாத்திரத்தில் மிரட்ட போவது இவர்தானா!

அந்த தொடரில் வந்த ஆதி குணசேகரன் என்ற பாத்திரம் தான் அதனை பட்டித் தொட்டியெல்லாம் கொண்டாடச் செய்தது.
எதிர்நீச்சல்: மீண்டும் வரும் ஆதி குணசேகரன்! புதிய AGS பாத்திரத்தில் மிரட்ட போவது யார்?
எதிர்நீச்சல்: மீண்டும் வரும் ஆதி குணசேகரன்! புதிய AGS பாத்திரத்தில் மிரட்ட போவது யார்?ட்விட்டர்
Published on

எதிர்நீச்சல் தொடரில், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தனியார் தொலைக்காட்சி தொடர் எதிர்நீச்சல். இந்த சீரியலில், பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், டொமஸ்டிக் வயலன்ஸ் அதனை எதிர்த்து போராடும் பெண்கள் என்ற தீமில் இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டது. இதனால் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பும் இருந்தது.

ஆனால், இத்தனையும் தாண்டி, அந்த தொடரில் வந்த ஆதி குணசேகரன் என்ற பாத்திரம் தான் அதனை பட்டித் தொட்டியெல்லாம் கொண்டாடச் செய்தது.

இதற்கு முக்கிய காரணம் அந்த பாத்திரத்தை ஏற்று நடித்த இயக்குநர் மற்றும் நடிகர் மாரிமுத்து. இவர் இரு வாரங்களுக்கு முன்னர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இவரது மரணம் அனைவரையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது.

இவரது மறைவுக்கு கோடானக் கோடி ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இனி இந்த பாத்திரத்தில் யார் நடிப்பார்கள்? மாற்று ஆளை நடிக்கவைத்தால் தொடர் மக்களை முன்பு போல ஈர்க்குமா? இல்லை தொடரிலும் ஆதி குணசேகரனை கொன்று விடுவார்களா என்பது போன்ற கேள்விகள் எழுந்தது.

இந்நிலையில், மாரிமுத்துவின் இடத்திற்கு சிறந்த மாற்றாக நடிகர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி இருப்பார் என்றும் கூறப்பட்டது.

எதிர்நீச்சல்: மீண்டும் வரும் ஆதி குணசேகரன்! புதிய AGS பாத்திரத்தில் மிரட்ட போவது யார்?
"ஜல்லிக்கட்டை நிறுத்துங்கள்" - எழுத்தாளர் வேல ராமமூர்த்தி

அவரிடம் நேரடியாகவே, விகடன் இது குறித்து கேட்டிருந்தபோலும்,

"என்னிடம் கேட்டிருக்கிறார்கள், இன்னும் அதைப் பற்றி முடிவு செய்யவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது இந்த பாத்திரத்தில் நடிக்க வேல ராமமூர்த்தி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், படப்பிடிப்பும் தொடங்கிவிட்டதாகவும் உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனில் விரைவில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தியை பார்க்கலாம். சீரியலிலும், தங்களது 'அண்ணன்' விரைவில் வருவார் என்று மற்ற கதாபாத்திரங்கள் ஹின்ட் கொடுத்துவருகின்றன.

முன்னதாக, வேல ராமமூர்த்தி அல்லாது, ஆனந்த் ராஜ், ராதா ரவி, இளவரசு உள்ளிட்ட நடிகர்களை அணுகியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்நீச்சல்: மீண்டும் வரும் ஆதி குணசேகரன்! புதிய AGS பாத்திரத்தில் மிரட்ட போவது யார்?
Marimuthu: இயக்குநர் - நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் மரணம்! திரைத்துறையினர் இரங்கல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com