varisu : ரஞ்சிதமே பாடலில் கவனம் ஈர்த்த குரல் - யார் இந்த மானசி?

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் மொத்தம் 170 பாடல்களுக்கும் மேலாக பாடியுள்ளார்.
மானசி
மானசிTwitter
Published on

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வாரிசு. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'ரஞ்சிதமே... ரஞ்சிதமே...’ லிரிகள் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் ரஞ்சிதமே பாடல் பாடிய பாடகி மானசியும் இடம்பெற்றிருந்தார்.

அந்த பாடலுக்கு பின் அவரின் குரலை மட்டுமே ரசித்துவந்தவர்கள் அவரையே ரசிக்கத் தொடங்கிவிட்டனர்.

யார் இந்த மானசி?

சென்னையில் பிறந்து மும்பையில் வளர்ந்த மானசி சிறு வயதிலிருந்தே இசை கற்கத் தொடங்கினார்.

அவர் வசித்த பகுதியில் நவராத்திரி மற்றும் கணபதி பூஜையின் போது பாடப்படும் பஜனைகளில் கண்டிப்பாக இடம் பெறுவார்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் மொத்தம் 170 பாடல்களுக்கும் மேலாக பாடியுள்ளார்.

இசை பயணம்

த்ரிஷ்யா படத்திற்காக இளையராஜாவால் கன்னட இசைத்துறைக்கு அறிமுகமானவர் மானசி.

2013ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் அறிமுகமான மானசி, தமிழிலும் அதே ஆண்டில் ஜிவி பிரகாஷ் இசையமைத்து, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'அன்னக்கொடி' திரைப்படத்தில் 'போராளே' என்ற பாடலை பாடியிருந்தார்.

தொடர்ந்து, ஆரம்பம், வாலு, அஞ்சான், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வன்மம், காக்கி சட்டை, புலி, சகலகலா வல்லவன், யாகவாரையினும் நாகாக்க, தாரை தப்பட்டை, விவேகம் என பல்வேறு தமிழ் படங்களில் பாடியிருக்கிறார்.

ஆரம்பம் படத்தில் ஸ்டைலிஷ் தமிழச்சி, புலி படத்தில் சொட்டவாளை ஆகிய பாடல்களும் மிகவும் அதிகம் வரவேற்பை பெற்றன. அப்போது அந்த பாடல் இவர் தான் பாடினார் என்பது யாருக்கும் தெரியாது.

மானசி
Amala Shaji : இந்த 2கே கிட் மேல் இவ்வளவு வெறுப்பு ஏன்?

பின்னணி குரல்

இவர் பாடகி மட்டுமின்றி, பல்வேறு முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

கிட்டதட்ட 35-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இவர் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அஞ்சானில் சமந்தா, பாகுபலியில் தமன்னா, மாரியில் காஜல் அகர்வால், கொடியில் திரிஷா ஆகியோருக்கு மானசிதான் டப்பிங் கொடுத்துள்ளார். இதற்கு பின்னர் மானசி சினிமாவில் நடிகையாக எண்டரி கொடுத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

மானசி
Bigg Boss Janany: ஒரே நாளில் ஆர்மி; த்ரிஷாவுக்கு போட்டியாகும் இந்த ஜனனி யார் ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com