Bigg Boss Janany: ஒரே நாளில் ஆர்மி; த்ரிஷாவுக்கு போட்டியாகும் இந்த ஜனனி யார் ?

பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ள ஜனனி பிக்பாஸ் முதல் சீசனில் இருந்தே பங்கேற்க வேண்டும் என விருப்பம் கொண்டவராக இருந்துள்ளார்.
Bigg Boss Janany
Bigg Boss JananyTwitter
Published on

கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு 11-வது போட்டியாளராக உள்ளே நுழைந்த ஜனனி முதல் நாளிலேயே கவனம் ஈர்த்தார்.

முதல் வாரத்திலேயே ஆர்மி

நிகழ்ச்சியில் தான் என்ட்ரியாகும் போது அவர் தொகுப்பாளர் என்று கமல்ஹாசனிடம் கூறிய சம்பவம் வைரலானது.

தான் பள்ளியில் படிக்கும்போது வருகாலங்களில் என்னவாக போகிறீர்கள் என்று யாராவது கேட்டால் த்ரிஷா மாதிரி ஆக வேண்டும் என்று கூறுவேன் என்று சொல்லி கமலையே ஆச்சரியப்படுத்தினார்.

இதற்கு கமலும் த்ரிஷாவுக்கு போட்டியாக ஒருவர் வந்துவிட்டார் என்று கூறியிருந்தார். அப்போதே இளைஞர்களின் கண்ணில் பட தொடங்கிவிட்டார் ஜனனி.

யார் இந்த ஜனனி?

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் 2000 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி ஜனனி பிறந்தார்.

அவர் யாழ்ப்பாணத்தில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

Bigg Boss Janany
Amala Shaji : பிரியங்கா மோகனை விட அதிக Followers; யார் இந்த 2K கிட்ஸ்லின் Reels க்ரஷ் ?

இலங்கை செய்தி வாசிப்பாளர்

மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஜனனி.

ஜனனி குணசீலன் ஒரு இலங்கை மாடல், டிக்டாக் நட்சத்திரம், செய்தி வாசிப்பாளர் மற்றும் இலங்கையிலிருந்து தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றும் தொகுப்பாளர் ஆவார். தமிழ் மொழி சேனலான IBC தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

மாடலிங்கில் ஆர்வம்

செய்தி வாசிப்பாளர் இருந்து ஒரு மாடலாக தனது மீடியா பயணத்தில் அடுத்த அடியை எடுத்து வைத்தார்.

அவர் ஸ்வர்ணலயா ஜூவல்லரி, TVC போன்ற புகழ்பெற்ற பிராண்டுகளுக்கு மாடலாக நடித்துள்ளார்

பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ள ஜனனி பிக்பாஸ் முதல் சீசனில் இருந்தே பங்கேற்க வேண்டும் என விருப்பம் கொண்டவராக இருந்துள்ளார்.

டிரெடிஷனல் தான் பிடிக்கும்

அவருக்கு டிரெடிஷனல் விஷயங்கள் மிகவும் பிடிக்குமாம்! அதை விரும்பி செய்யும் நபராக இருக்கும் ஜனனிக்கு தற்போதே ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

இன்ஸ்டாவை தேடும் ரசிகர்கள்

புகைப்படத்திலிருக்கும் கேள்விகள் தான் கூகுளில் ஜனனி குறித்து அதிகம் தேடப்பட்டவை.

பொழுதுபோக்கு

நடனம்

புத்தகம் வாசிப்பது

திரைப்படம் பார்ப்பது

டிராவல்

ஆகியவை அவருக்குப் பிடித்தமானவை

பிக் பாஸில் விளையாட கூட இன்னும் தொடங்கவில்லை, ஆனால் அதற்குள் அவருக்கு ரசிகர் பட்டாளம், ஆர்மி... அவர் சொன்னது போல த்ரிஷாவை போன்று ஒரு தென்னிந்திய குயினாக வலம் வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

Bigg Boss Janany
டிக்டாக் டு பிக்பாஸ்: மக்கள் மனம் வென்ற இந்த ஜி.பி முத்து யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com