LEO: "நம்ம மக்களுக்கு படம் பண்ணுவோம்ன்னு விஜய் சொன்னார்" - லலித் குமார் சொன்ன சீக்ரட்!

"நான் விஜயிடம், "நாம் பான்-இந்தியா படம் பண்ணாலாம்" என்றேன். அதற்கு விஜய், "அதெல்லாம் வேண்டாம்பா. நம்ம மக்களுக்கு படம் பண்ணா போதும்" என்றார்" என லலித் குமார் பேசினார். மேலும் படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்து முக்கியமான அப்டேட்டும் கொடுத்துள்ளார்.
LEO: "நம்ம மக்களுக்கு படம் பண்ணுவோம்ன்னு விஜய் சொன்னார்" - லலித் குமார் சொன்ன சீக்ரட்!
LEO: "நம்ம மக்களுக்கு படம் பண்ணுவோம்ன்னு விஜய் சொன்னார்" - லலித் குமார் சொன்ன சீக்ரட்!Twitter
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ திரைப்படம் தான் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக இருந்திருக்கிறது.

பொதுவாகவே விஜய் படங்கள் கேரளா மற்றும் ஆந்திராவில் ஹிட் அடிக்கும். கடைசியாக அவர் நடித்த வாரிசு படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி படிப்பள்ளி இயக்கியிருந்தார்.

லியோ திரைப்படம் மிகப் பெரிய நட்சத்திரபட்டாளத்துடன் உருவாகி வருகிறது. நிச்சயமாக லியோ அனைத்து மொழிகளிலும் ஹிட் படமாக இருக்கும் என அனைவரும் நம்புகின்றனர்.

இருந்தாலும் லியோவை பான்-இந்தியா படமாக வெளியிடுவதில் நடிகர் விஜய்க்கு தயக்கம் இருந்ததாக தயாரிப்பாளர் லலித் குமார் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற CII தக்ஷின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு 2023-ல் பேசியவர், "நாங்கள் லியோவை பான்-இந்தியா படமாகத் திட்டமிடவில்லை. ஆனால் லோகேஷின் விக்ரம் வெற்றிக்கு பிறகு நான் விஜயிடம், "நாம் பான்-இந்தியா படம் பண்ணாலாம்" என்றேன்.

அதற்கு விஜய், "அதெல்லாம் வேண்டாம்பா. நம்ம மக்களுக்கு படம் பண்ணா போதும்" என்றார்.

பின்னர் நானும் லோகேஷும் அவரை சம்மதிக்க வைத்து கதையில் சிறிய மாற்றங்களை செய்து பான்-இந்தியா படமாக உருவாக்கினோம்" எனப் பேசினார்.

lalit kumar
lalit kumar

மேலும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தும் லலித் குமார் பேசினார், "லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் சென்னையில் நடைபெறாது. திருச்சி, மதுரை அல்லது கோவையில் நடைபெறும்.

நாங்கள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தலாம் என விஜயிடம் தெரிவித்தோம். ஆனால் அவர், "இதே இடத்தில் எப்போதும் நடத்துவது போரிங். என்னைய வெளியில கூட்டிட்டு போங்க. வெளியில மக்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு." என்றார். இதனால் நாங்கள் வேறு இடத்தில் ஆடியோ லாஞ்ச் நடத்த திட்டமிட்டுள்ளோம்."

LEO: "நம்ம மக்களுக்கு படம் பண்ணுவோம்ன்னு விஜய் சொன்னார்" - லலித் குமார் சொன்ன சீக்ரட்!
Vijay: இன்ஸ்டாவில் அதிவேக 1 மில்லியன் ஃபாலோவர்ஸ்! 3வது இடத்தில் விஜய் - முதலிடம் யாருக்கு?

லோகேஷ் கனகராஜின் படங்கள் இடம் பெற்றிருக்கும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் லியோ திரைப்படம் இடம் பெறுமா என்ற கேள்விக்கு, "நீங்கள் படம் பார்க்கும்போது தெரிந்துகொள்வீர்கள். ஒருவேளை இருந்தால் அதனை சிறப்பாக அறிவிப்போம்" என்றார் லலித்.

LEO: "நம்ம மக்களுக்கு படம் பண்ணுவோம்ன்னு விஜய் சொன்னார்" - லலித் குமார் சொன்ன சீக்ரட்!
Leo : LCU-க்குள் வருகிறதா விஜய் படம் - Hint கொடுத்த இயக்குநர்; வைரலாகும் மீம்ஸ்

வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி லியோ படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஸ்கின், பிரியா வாரியர் மற்றும் த்ரிஷா முதலானோர் லியோ படத்தில் நடிக்கின்றனர்.

LEO: "நம்ம மக்களுக்கு படம் பண்ணுவோம்ன்னு விஜய் சொன்னார்" - லலித் குமார் சொன்ன சீக்ரட்!
Leo : “லோகேஷ் நெற்றியில் நான் முத்தமிட்டேன்” - சென்னை திரும்பிய மிஷ்கின் நெகிழ்ச்சி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com