யாரு இந்த விஜய் சேதுபதி ? விதை விருட்சமானது இப்படித்தான்! - நம்பிக்கை தரும் பயணம்

தமிழ் சினிமாவின் முகங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கிறார் இந்த சேதுபதி. அவர் குறித்த சுவார்ஸ்யமான சில தகவல்களை இங்கே பகிர்கிறோம்.
யாரு இந்த விஜய் சேதுபதி ? விதை விருட்சமானது இப்படித்தான்! - நம்பிக்கை தரும் பயணம்
யாரு இந்த விஜய் சேதுபதி ? விதை விருட்சமானது இப்படித்தான்! - நம்பிக்கை தரும் பயணம்ட்விட்டர்
Published on
துபாயில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு விஜய் சேதுபதி ஏதோவொரு நம்பிக்கையில் விமானம் ஏறிய போது, தன்னைத்தானே ஒருமுறை இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டிருந்து இருப்பார். ”யார் இந்த சேதுபதி? தமிழ் சினிமாவின் தன் இடம் என்ன?” என்று!
news sense

2010ஆம் ஆன்ண்டு டிசம்பர் 23ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் ஒரு பதிவை பகிர்கிறார்.

அதில், ‘“தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படம் நாளை வெளியாகிறது. வெள்ளித்த்திரையில் விஜய் சேதுபதியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என ஒரு பதிவை பகிர்கிறார்.

அந்த பதிவிற்கான பின்னூட்டத்தில் ஒருவர், “யார் விஜய்சேதுபதி?” என கேட்கிறார். அதற்கு மறுமொழியாக கார்த்திக் சுப்புராஜ், “விரைவில் அறிவீர்கள்" என்கிறார்.

இன்று மாநில எல்லைகள் கண்டு அனைவரும் அறிவார்கள், இந்த சேதுபதியை! திரை உலகத்தின் மக்கள் செல்வனை.

யார் விஜய் சேதுபதி?

இப்போது இந்தக் கேள்வி நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், துபாயில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு விஜய் சேதுபதி ஏதோவொரு நம்பிக்கையில் விமானம் ஏறிய போது, தன்னைத்தானே ஒருமுறை இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டிருந்து இருப்பார்.

”யார் இந்த சேதுபதி?

தமிழ் சினிமாவின் தன் இடம் என்ன?” என்று!

தமிழ் சினிமாவின் முகங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கிறார் இந்த சேதுபதி.

அவர் குறித்த சுவார்ஸ்யமான சில தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

யாரு இந்த விஜய் சேதுபதி ? விதை விருட்சமானது இப்படித்தான்! - நம்பிக்கை தரும் பயணம்
Bigg Boss & டிக் டாக் பிரபலம், BJP தலைவர் சோனாலி போகத் காலமானார் - யார் இந்த இணைய பிரபலம்?

நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அதற்கு முன்பு ‘லீ’, ‘புதுப்பேட்டை’, ‘வெண்ணிலா கபடிக் குழு’ உள்ளிட்ட பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி.

தென்மேற்கு பருவக்காற்று விருதுகளை பெற்று இருந்தாலும், விஜய் சேதுபதியை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது 2012இல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கய முதல் படமான ‘பீட்சா’ தான்.

இந்தப் படமே நாயகனாக விஜய் சேதுபதியின் முதல் வணிக வெற்றிப் படம். அதன் பிறகு அவர் நிகழ்த்திக் காட்டியவை அனைத்தும் மேஜிக்குகள்.

’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தில் இவர் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. ’சூது கவ்வும்’ திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஆனால், அந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்ய அசாத்திய துணிச்சல் வேண்டும். அந்த சமயத்தில் எந்தவொரு நாயகனும் அப்படியான பாத்திரத்தை தேர்வு செய்ய தயங்கி இருப்பார்கள்; மறுத்து இருப்பார்கள்.

நடிக்க வருவதற்கு முன்பு ஏராளமான இடங்களில் பணியாற்றி இருக்கிறார் விஜய் சேதுபதி. அவர் தனது கல்லூரி படிப்பை துரைப்பாக்கத்தில் உள்ள தன்ராஜ் ஜெயின் கல்லூரியில் முடித்தார். அவர் படித்தது ‘வணிகம்.’

பின்னர் கணக்காளராக சில இடங்களில் பணியாற்றி இருக்கிறார். கூத்துப்பட்டறைக்குள் அவர் கணக்கராகத்தான் நுழைந்தார். ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தில் வரும் சில காட்சிகள் இவர் வாழ்க்கையில் நடந்தவை.

யாரு இந்த விஜய் சேதுபதி ? விதை விருட்சமானது இப்படித்தான்! - நம்பிக்கை தரும் பயணம்
Bigg Boss நிகழ்ச்சியில் ஒரு அரசியல்வாதி - யார் இந்த விக்ரமன்?

இவரது மனைவியின் பெயர் ஜெஸ்ஸி. காதல் திருமணம். ஜெஸ்ஸி ஒரு Fmஇல் பணியாற்றியவர். தான் இந்த உச்சத்தை தொட ஜெஸ்ஸியே காரணம் என பல பேட்டிகளில் பதிவு செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.

வில்லனாக விஜய் சேதுபதி முதல்முதலாக நடித்த படம் சுந்தர பாண்டியன். அதன் பிறகு பேட்ட, மாஸ்டர், விக்ரம் என கதாநாயகர்களை மிரட்டும் நாயகனாக வளர்ந்து நிற்கிறார்.

தமிழ் எல்லைகள் தாண்டி தெலுகிலும் விஜய் சேதுபதி மோஸ் வாண்டட் ஆக்டர்.

800 படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. வேறு ஒரு உச்சத்தை தொட நினைத்திருந்த தருணத்தில் அப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பு நிச்சயம் விஜய் சேதுபதியே எதிர்பார்க்காதது.

விஜய் சேதுபதியின் நடிப்பு, திரைப்படத் தேர்வு ஆகியவை குறித்து பலருக்கு விமர்சனங்களும் இருக்கின்றன. ஒரு நல்ல படத்தில் நடித்தால் அடுத்து நான்கு மோசமான படத்தில் நடிப்பார் என்பது அதில் ஒன்று.

இப்படியான விமர்சனங்கள் அனைத்து நடிகர்கள் மீதும் இருக்கின்றன. ஆனால், இதனை கடந்து அவர் எப்போதும் பரிட்சார்த்த முயற்சிகளை கைவிடுவதில்லை.

நடிகன் என்பதை கடந்து தயாரிப்பாளராகவும் பலருக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறார் சேதுபதி. இவர் தயாரித்த ஆரஞ்சு மிட்டாய் படுதோல்வி அடைந்திருந்தாலும், விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது.

சினிமாவைத் தாண்டி சின்னத்திரையிலும் கால் பதித்து இருக்கிறார் விஜய் சேதுபதி. இவர் சன் டிவியில் ‘நம்ம ஊரு ஹீரோ’ எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

யாரு இந்த விஜய் சேதுபதி ? விதை விருட்சமானது இப்படித்தான்! - நம்பிக்கை தரும் பயணம்
Yash : நாடக கலைஞர் முதல் KGF வரை - யார் இந்த யாஷ்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com