Bigg Boss & டிக் டாக் பிரபலம், BJP தலைவர் சோனாலி போகத் காலமானார் - யார் இந்த இணைய பிரபலம்?

சோனாலி போகத்தின் உதவியாளரும் இச்செய்தியை உறுதி செய்துள்ளதாக பல்வேறு வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சோனாலி போகத்
சோனாலி போகத்டிவிட்டர்

இணைய பிரபலம், பிக்பாஸ் புகழ், பாஜக தலைவர் சோனாலி போகத் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அரசியல்வாதிகள் எப்படி அரசியலுக்குள் வந்திருப்பார்கள் என்ற கேள்விக்கு பெரும்பாலும் ஒரே மாதிரியான விடையை தான் பார்க்க முடியும்.

அந்த ஊரில் நல்ல பெயர் பெற்ற நபராக இருந்திருப்பார் அல்லது புகழ்பெற்ற தலைவர்கள் & அதிகாரிகளின் வாரிசுகளாக இருந்திருப்பார்கள். விளையாட்டு, சினிமா, கல்வி போன்ற துறைகளில் சிறந்து விளங்கி இருப்பார்கள். முன்னாள் அரசு அதிகாரிகளாக இருந்திருப்பார்கள் அல்லது மிகவும் புகழ்பெற்ற பிரபலங்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் தான் எளிதில் அரசியலுக்குள் நுழைய முடிந்திருக்கிறது.

இந்திய இணைய உலகத்தில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் தான் சோனாலி போகத். இந்தியாவில் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் மட்டுமே மிகப்பெரிய சமூக வலைதளங்களாக இருந்த காலத்தில், டிக்டாக் களமிறங்கிய போது அடுத்த கட்ட இணைய பிரபலங்கள் உருவாயினர்.

சோனாலி போகத்
பிரதாப் போத்தான் : ஆரவம் டூ கமலி - அவர் நடித்த திரைப்படங்கள் இவைதான்

அப்படி டிக்டாக்கின் மூலம் மட்டுமே பிரபலமான நபர்களில் சோனாலி போகத்தும் ஒருவர். இவருடைய வீடியோக்களுக்கு இணைய ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்தனர்.

அவரது இனிய புகழ் காரணமாக இந்தி பிக் பாஸ் 14வது சீசனில் கலந்து கொண்டார். அது அவரை மேலும் இந்தியா முழுக்க புகழ்பெறச் செய்தது. அதுபோக 2016 ஆம் ஆண்டு 'அம்மா : ஏக் மா ஜோ லாகோன் கே லியே பனி அம்மா (Amma: Ek Maa Jo Laakhon Ke Liye Bani Amma)' என்கிற ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்தார். அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு தி ஸ்டோரி ஆஃப் பத்மாஷ்கர் (The Story Of Badmashgarh) என்கிற வெப் சீரிஸிலும் நடித்து பிரபலமானார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அடம்பூர் தொகுதியில் குல்தீப் பிஷ்னோய் என்பவருக்கு எதிராக நின்று போட்டியிட்டு தோற்றுப் போனார். பாரதிய ஜனதா கட்சியின் மகிளா மோர்ச்சா பிரிவின் தேசிய துணை தலைவராகவும் சோனாலி போகத் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதது.

41 வயதான இவர் சில மணி நேரங்களுக்கு முன்பு கோவா மாநிலத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஹரியானா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஓ பி தங்கரும், சோனாலி போகத் கோவா மாநிலத்தில் மாரடைப்பு காரணமாக காலமானதை உறுதி செய்துள்ளார். சோனாலி போகத்தின் உதவியாளரும் இச்செய்தியை உறுதி செய்துள்ளதாக பல்வேறு வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சோனாலி போகத்
பிரதாப் போத்தன்: "அன்பு, வாழ்க்கை, மரணம்" - வைரலாகும் இயக்குநரின் கடைசி பதிவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com