லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, தற்போது டிரெண்டாகி வரும் ஏஜென்ட் டீனா ஆகியோரின் நடிப்பில் ஜூன் 3 அன்று வெளியானது விக்ரம் திரைப்படம். அனிருத்தின் அனல் தெறிக்கும் பின்னணி இசை,வெளியான முதல் நாளே 100 கோடி வசூல் செய்தது படம். தமிழகத்தில் மட்டும் 20 கோடி லாபம் ஈட்டியிருந்தது.
வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்திருந்த லோகேஷ், நான்கு வருடங்கள் கழித்து திரையில் தோன்றும் கமல், இன்றைய தமிழ், மலையாள சினிமாவின் தவிர்க்கமுடியாத பெயர்களாக இருக்கும் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா, கைதி படத்தின் ஒரு நீட்சியாக விக்ரமின் கதை என பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் வந்த விக்ரம், தென்னிந்தியாவில், தமிழகத்தில் பெற்ற வரவேற்பை விட, ஹிந்தியில் சற்று குறைவாகவே இருந்துள்ளது.
ஹிந்தியில் முதல் நாள் வசூல் வெறும் 25 லட்சம் தான். வெளியாகி மூன்று நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், ஞாயிற்று கிழமை அன்று தமிழ், மலையாளம், தெலுங்கில், திரையரங்குகளில் 60 சதவிகிதத்துக்கு மேல் Occupancy இருந்த நிலையில், ஹிந்தியில் வெறும் 25% தான் இருந்ததாக கூறுகிறது sacnilk.com ன் தகவல்கள்.
உலகளவில் 150 கோடி வசூல், இந்தியாவில் மட்டும் மூன்று நாட்களில் 100 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது விக்ரம். அதுமட்டுமல்லாமல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தகவல் படி 2022ல் கேரளா மற்றும் கர்நாடகாவில் 10 கோடி வசூல் செய்துள்ள தமிழ் படம் என்ற சாதனையும் இதில் அடங்கும்.
இருந்தும் ஹிந்தியில் ஏற்பட்டுள்ள குறைந்த வசூல், விநியோகஸ்தர்களுக்கு கொஞ்சம் நஷ்டத்தை விளைவிக்கும் வகையில் தான் உள்ளது. அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான சாம்ராட் பிரித்விராஜ் படத்தின் வசூலை முந்தியிருந்தாலும், விக்ரமின் வசூல் குறைந்துதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp