Vikraman: பிக்பாஸில் இருந்து வெளிவந்த விக்ரமன்: அம்பேத்கர் படம் முன்பு என்ன செய்தார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த விக்ரமன் அம்பேத்கரின் புகைப்படத்திற்கு பூக்களை தூவி ஜெய் பீம் என்று வீர கோஷம் இட்டு இருக்கிறார்.
அம்பேத்கர் படத்திற்கு முன்பு விக்ரமன்
அம்பேத்கர் படத்திற்கு முன்பு விக்ரமன்Twitter
Published on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் முடிந்தது. இந்த சீசனில் டைட்டிலை அசீம் பெற்றிருக்கிறார். அடுத்ததாக விக்ரமன் ரன்னராக ஆகியிருக்கிறார். ஷிவின் ரன்னர் அப் ஆகி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த விக்ரமன் அம்பேத்கரின் புகைப்படத்திற்கு பூக்களை தூவி ஜெய் பீம் என்று வீர கோஷம் இட்டு இருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாக வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனின் டைட்டில் வின்னர் விக்ரமன் தான் என்று ரசிகர்கள் அதிகமானோர் கருத்து கூறி வந்தனர்.

இந்த நிலையில் தான் டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் தனக்கு இத்தனை நாட்களாக ஆதரவு தந்த ரசிகர்களுக்கு விக்ரமன் நன்றி கூறியிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் தான் ஒவ்வொரு இடத்திலும் போராடித்தான் வெற்றியை பெற்று இருக்கிறேன்.

வெற்றி எனக்கு அவ்வளவு எளிதில் எந்த இடத்திலும் கிடைத்தது இல்லை என்று உருக்கமாகவும் கூறி இருக்கிறார்.

அம்பேத்கர் படத்திற்கு முன்பு விக்ரமன்
Bigg Boss நிகழ்ச்சியில் ஒரு அரசியல்வாதி - யார் இந்த விக்ரமன்?

ரன்னராக தேர்வாகி இருக்கும் விக்ரமன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் அம்பேத்கர் படத்தின் முன்பு மலர்களை தூவி மரியாதை செலுத்தி இருக்கிறார்.

தன்னுடைய ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தி "ஜெய் பீம்" என்ற வீர கோஷத்தை எழுப்பி மகிழ்ந்திருக்கிறார். விக்ரமுடைய செயலை அவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அம்பேத்கர் படத்திற்கு முன்பு விக்ரமன்
ராதிகா மெர்ச்சன்ட் : முகேஷ் அம்பானி முதல் ஆமீர் கான் வரை பங்கேற்ற அரங்கேற்றம் - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com