ராதிகா மெர்ச்சன்ட் : முகேஷ் அம்பானி முதல் ஆமீர் கான் வரை பங்கேற்ற அரங்கேற்றம் - யார் இவர்?

கடந்த ஜூன் 5ஆம் தேதி மும்பை ஜியோ வேர்ல்ட் மையத்தில் நடைபெற்ற ராதிகா மெர்கன்டின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர்கள் மட்டுமல்லாமல், முகேஷ் அம்பானி, நீதா அம்பானி ஆக்யோரும் பங்கேற்றனர்
ராதிகா மெர்ச்சன்ட்
ராதிகா மெர்ச்சன்ட்NewsSense

ராதிகா மெர்சன்ட் என்கிற இளம் பெண் ஒருவரின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த ஜூன் 5 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மும்பை நகரத்தில், ஜியோ வேர்ல்ட் மையத்தில் உள்ள கிராண்ட் தியேட்டரில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி, அவர் மனைவி நீதா அம்பானி, இந்தி சினிமா நடிகர்கள் சல்மான்கான், ஆமீர் கான், ரன்வீர் சிங் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Radhika Merchant
Radhika MerchantTwitter
ராதிகா மெர்ச்சன்ட்
Jio அம்பானி : Ambaniயை அம்பலப்படுத்துவேன், சீறிய ராம்நாத் கோயங்கா - ரியல் 'குரு' கதை | 17

யார் இந்த ராதிகா மெர்சன்ட்?

குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட ராதிகா மெர்சன்ட், என்கோர் ஹேல்த்கேர் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் ஆங்கர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் துணைத் தலைவர் விரேன் மெர்சன்டின் மகள். இவருக்கு அஞ்சலி மெர்சன்ட் என ஒரு இளைய சகோதரியும் இருக்கிறார் என பிங்க்வில்லா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Anant Ambani and Radhika Merchant
Anant Ambani and Radhika MerchantTwitter

ராதிகா, மும்பையில், பாவனா தாகர் என்கிற நாட்டிய குருவின் ஶ்ரீ நிபா ஆர்ட்ஸ் என்கிற நாட்டியப் பள்ளியில் முறையாக பரதநாட்டியம் பயின்றவர்.

ராதிகா, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியைத் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக பல்வேறு வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருமே பால்ய காலத்து நண்பர்கள் என்றும் பிங்க்வில்லா வலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ராதிகா மெர்சன்ட் தன் பள்ளிப் படிப்பை மும்பையில் உள்ள கெதிட்ரல் அண்ட் ஜான் கானான் பள்ளியிலும், இகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளியிலும் படித்ததாகவும், அதனைத் தொடர்ந்து, பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்ததாகவும் கூறப்படுகிறது.

Mukesh-Nitha Ambani
Mukesh-Nitha AmbaniTwitter
ராதிகா மெர்ச்சன்ட்
Jio அம்பானி கதை : ஒரு ஐஸ்கிரீமுக்காக உயிரை பணையம் வைத்து நீந்திய திருபாய் அம்பானி| பகுதி 2

2017ஆம் ஆண்டு தன் பட்டப்படிப்பை நிறைவு செய்த பின் இந்தியா திரும்பிய ராதிகா, இஸ்ப்ரவா என்கிற நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அவருக்கு புத்தகங்கள், மலையேற்றம், நீச்சல் மிகவும் பிடிக்குமாம். காபி என்றால் ராதிகாவுக்கு உயிர் என்கிறது இந்தியா டுடே வலைதளம்.

2017ஆம் ஆண்டு ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்தத்தின் போது, ஷாரூக் கான், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்டை தொடர்ந்து வம்பிழுத்ததாக இந்தியா டுடேவில் செய்தி வெளியாகியுள்ளது.

Ranveer SIngh
Ranveer SInghTwitter

சமீபத்தில் கூட, ராதிகாவின் அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு 10க்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பாய் என ஷாரூக் கான் ஆனந்த் அம்பானியிடம் கேட்டதாகவும், அதற்கு 'ஒரு மில்லியன்... இன்ஃபினிட்டி' என விடையளித்ததாகவும் அதே வலைதளத்தில் செய்தி வெளியானது.


2018ஆம் ஆண்டு ஆனந்த் மற்றும் ராதிகா ஒரே நிறத்தில் உடையணிந்து சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது

ராதிகா மெர்ச்சன்ட்
முகேஷ் அம்பானி சம்பளம் என்ன? அவரை விட அதிக சம்பளம் வாங்கும் சி இ ஓ யார்? - சுவாரஸ்ய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com