”ஒரு பெண்ணின் இமேஜை கெடுக்கிறீர்கள்” - திருமணம் குறித்து பரவிய தகவலுக்கு விஷால் விளக்கம்

ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல, எனக்கு திருமணம் என்றால்...
”ஒரு பெண்ணின் இமேஜை கெடுக்கிறீர்கள்” - திருமணம் குறித்து பரவிய தகவலுக்கு விஷால் விளக்கம்
”ஒரு பெண்ணின் இமேஜை கெடுக்கிறீர்கள்” - திருமணம் குறித்து பரவிய தகவலுக்கு விஷால் விளக்கம்Twitter
Published on

நடிகை லெட்சுமேனன் உடன் தனது திருமணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார்.

திரைத்துறை சார்ந்தவர்களின் திருமணம் அல்லது காதல் தொடர்பான தகவல்கள் அவ்வபோது சமூகவலைதளங்களில் பரவுவதுண்டு. சில தகவல்கள் உண்மையாக இருக்கலாம், சிலவை வதந்தியில் முடியலாம்.

அப்படிநடிகர் விஷால் - நடிகை லட்சுமி மேனன் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வந்தன.

விஷால்
விஷால்Twitter

இந்த நிலையில் இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் “பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலிச் செய்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. அப்படி செய்வது பயனற்றது என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனன் உடனான எனக்கு திருமணம் என்ற வகையில் வதந்தி பரவி வருவதால், நான் இதை முற்றிலுமாக மறுக்கிறேன். இந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது.

”ஒரு பெண்ணின் இமேஜை கெடுக்கிறீர்கள்” - திருமணம் குறித்து பரவிய தகவலுக்கு விஷால் விளக்கம்
கவினுக்கு திருமணம்; மணப்பெண் லாஸ்லியாவின் Stylist ஆ? யார் இந்த மோனிக்கா டேவிட்?

என்னுடைய இந்த விளக்கத்துக்கு காரணம், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து, அவருடைய இமேஜைக் கெடுக்கிறீர்கள்.

ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பேன்” என்று விஷால் கூறி திருமணம் குறித்து பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வந்தார்.

”ஒரு பெண்ணின் இமேஜை கெடுக்கிறீர்கள்” - திருமணம் குறித்து பரவிய தகவலுக்கு விஷால் விளக்கம்
ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை இலியானா - இவர் தான் கணவரா? எப்போது திருமணம் நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com