ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை இலியானா - இவர் தான் கணவரா? எப்போது திருமணம் நடந்தது?

இலியானவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் தரித்தாரா? இவருக்கு ரகசியமாக திருமணம் நடந்ததா? இவரது கணவர் யார்? என்பது போன்ற கேள்விகள் வைக்கப்பட்டன.
ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை இலியானா - இவர் தான் கணவரா? எப்போது திருமணம் நடந்தது?
ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை இலியானா - இவர் தான் கணவரா? எப்போது திருமணம் நடந்தது?twitter

நடிகை இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு கோ ஃபீனிக்ஸ் டோலன் என்று பெயரிட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் நடிகை.

மேலும் இவருக்கு கடந்த மே மாதமே திருமணம் ஆகிவிட்டதாகவும், கணவரின் பெயர் மைக்கெல் டோலன் எனவும் டி என் ஏ தளத்தின் அறிக்கை கூறுகிறது.

தமிழில் ரவிக் கிருஷ்ணா நடித்த கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியான டி க்ரூஸ். தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே தெலுங்கில் அறிமுகமாகியிருந்தார்.

மகேஷ் பாபு நடித்த போக்கிரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார். அதன் பிறகு தெலுங்கிலும், இந்தியிலும் முன்னணி நடிகர்களுடன் கைக்கோர்த்தார் இலியானா.

பல ஆண்டுகளுக்கு பிறகு, இயக்குநர் சங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் மீண்டும் தமிழில் நடித்தார்.

இந்நிலையில், தான் கர்ப்பம் தரித்திருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் தன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

இலியானவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் தரித்தாரா? இவருக்கு ரகசியமாக திருமணம் நடந்ததா? இவரது கணவர் யார்? என்பது போன்ற கேள்விகள் வைக்கப்பட்டன.

ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை இலியானா - இவர் தான் கணவரா? எப்போது திருமணம் நடந்தது?
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை!

ஆனால், அதை எல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், தனது பிரெக்னன்ஸி பயணத்தை பற்றி அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்வார் இலியானா.

இந்நிலையில், தற்போது நடிகை இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி குழந்தை பிறந்ததாக டி என் ஏ தளத்தின் அறிக்கை கூறுகிறது.

"எங்கள் அன்பு மகனை இந்த உலகுக்கு வரவேற்பதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறோம்.

நடிகையின் இந்த போஸ்ட் வைரலாகி, ட்விட்டர் டிரெண்டிங்கில் உள்ளது. நடிகைகள், நடிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை இலியானா - இவர் தான் கணவரா? எப்போது திருமணம் நடந்தது?
நயன்தாரா-விக்னேஷ் சிவன்: 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணமா? ஆதாரங்களை சமர்பித்த தம்பதி

மேலும், டி என் ஏ தளம், பலரின் கேள்வியாக இருந்த இலியானவின் கணவர் யார் என்பதற்கும் பதிலளித்துள்ளது.

நடிகை இலியானா மைக்கெல் டோலன் என்பவரை கடந்த மே 13 ஆம் தேதி மணந்ததாகவும், எங்கு திருமணம் நடந்தது, அவர் யார் என்ன வேலை செய்கிறார் என்பது குறித்த தகவல்கள் இல்லை எனவும் அறிக்கை கூறியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் மைக்கெல்லின் ஒரு blur ஆன புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். மைக்கெல்லும், இலியானாவும் ஒரு வருடமாக காதலித்து வருவதாக அறிக்கை கூறுகிரது.

ஆனால், நடிகையின் தரப்பில் இருந்து இது பற்றிய எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை இலியானா - இவர் தான் கணவரா? எப்போது திருமணம் நடந்தது?
Nayanthara-Vignesh: இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்த தம்பதி - என்ன அர்த்தம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com