மயில்சாமி குறித்து நெகிழ்ந்த விவேக்
மயில்சாமி குறித்து நெகிழ்ந்த விவேக்Twitter

மயில்சாமி : இந்த காலத்துல இப்படி ஒரு மனிதரா? - விவேக்கின் நெகிழ்ச்சி வீடியோ வைரல்

ஷீரடி சாய்பாபா மாதிரி ஒருநாள் பாத்தா பணக்காரனாக இருப்பான், ஒரு நாள் பாத்தா ஏழையாக இருப்பான். நல்ல மனிதன்.
Published on

நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென நெஞ்சுவலி காரணமாக இறந்துள்ளது திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். மயில்சாமி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மயில்சாமியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான விவேக், மயில்சாமி குறித்து மனம் திறந்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசியதாவது,

மயில்சாமி, எம்ஜிஆரின் தீவிர ரசிகர், அவரை போலவே அடுத்தவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்.

நாம் அவரை பார்க்கும் போது இளிச்சவாயனா என தோன்றும். ஆனால் பிறருக்கு கஷ்டம் என்றால் ஓடிஓடி உதவி செய்பவர்.

ஷீரடி சாய்பாபா மாதிரி ஒருநாள் பாத்தா பணக்காரனாக இருப்பான், ஒரு நாள் பாத்தா ஏழையாக இருப்பான். நல்ல மனிதன்.

அதேபோல, ஒரு புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தின் போது கையில் இருந்த காசை எல்லாம் நிகழ்ச்சி ஒன்றில் வாசித்த இசை கலைஞருக்கு அன்பாக கொடுத்துவிட்டு, ஆட்டோவுக்கு பணம் இல்லாமல் என்னிடம் வாங்கிச் சென்றார்.

பாரதியார் போல தனது பணம் வேண்டும் என்று துளியும் கவலைப்படாமல் பிறருக்கு கொடுத்து உதவி செய்யும் குணம் கொண்டவன்.

யாருக்காவது படிப்புக்கு உதவித்தேவை என்றால் தன்னிடம் பணம் இல்லாத போது நடிகர் சத்யராஜ் போன்ற சக நடிகர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் பணம் வாங்கி உதவி செய்யும் குணம் கொண்டவன் மயில்சாமி" என நடிகர் விவேக் பேசியிருப்பார்.

இந்த வீடியோ பழையது என்றாலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கிறது.

மயில்சாமி குறித்து நெகிழ்ந்த விவேக்
லதா மங்கேஷ்கர் முதல் எலிசபெத் ராணி வரை - 2022 ஆம் ஆண்டு மறைந்த 10 பிரபலங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com