உலகம் முழுவதும் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் கொடிக்கட்டி பறந்து தங்களின் தனி திறமைகளால் மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடிக்கின்றனர்.
இந்தியா தனது நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரை இழந்தது. அதே நேரத்தில் பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை கண்ணீருடன் அனுப்பி வைத்தது. இந்த ஆண்டில் மட்டும் பல துறைகளில் சாதித்த பலர் மரணித்துள்ளனர்.
2022ல் மறைந்த 10 முக்கிய பிரபலங்களுக்கு உலகம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. யார் அவர்கள் என்று காணலாம்
இந்திய திரைப்பட இசையின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் பிரியமான குரல்களில் ஒருவரான லதா மங்கேஷ்கர், எட்டு தசாப்தங்களாக தனது வாழ்க்கையில் 36 இந்திய மொழிகளிலும் பல வெளிநாட்டு மொழிகளிலும் 25,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
'மெல்லிசை ராணி' மற்றும் 'இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அன்புடன் அழைக்கப்படும் அவர், இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா மற்றும் மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றவர்.
பாலிவுட்டின் 'லதா தீதி' தனது 92 வயதில் பல உறுப்பு செயலிழப்பு காரணமாக பிப்ரவரி 6, 2022 அன்று காலமானபோது, அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயங்களில் ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றார்.
பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 8ல் காலமானார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத் தான்.
1953 ஆம் ஆண்டு முதல் பதவியில் நீடித்து வந்த ராணி எலிசபெத் இறக்கும் முன்பு வரை 32 இறையாண்மை கொண்ட மாநிலங்களின் அரசியாகவும், 15 நாடுகளின் அரச தலைவராகவும் இருந்தார்.
70 ஆண்டுகள் மற்றும் 214 நாட்கள் நீடித்த அவரது ஆட்சி பிரிட்டனின் வரலாற்றிலேயே வேறு எவரும் செய்யாத ஆட்சி காலம்.
அவர் தனது வாழ்நாளில் வின்ஸ்டன் சர்ச்சில், மார்கரெட் தாட்சர் மற்றும் சமீபத்தில் போரிஸ் ஜான்சன் உட்பட 15 பிரதமர்களை நியமித்துள்ளார். ராணி நாய்களை நேசிப்பவர் மற்றும் அவரது வாழ்நாளில் 30 கார்கிகளை வைத்திருந்தார்.
52 வயதில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் மரணம், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் மார்ச் 4, 2022 அன்று தாய்லாந்து தீவில் விடுமுறையில் இருந்தபோது மாரடைப்பால் இறந்தார்.
சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் வார்னே, 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இது 2007 இல் இலங்கையின் முத்தையா முரளிதரனால் முறியடிக்கப்படும் வரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாக இருந்தது.
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், ராம் மனோகர் லோஹியா மற்றும் ராஜ் நரேன் போன்ற சோசியலிச இயக்கத்தின் முக்கியஸ்தர்களால் பயிற்சி பெற்றவர், இந்தியாவில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.
அவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, அக்டோபர் 10, 2022 அன்று சிகிச்சை பலனின்றி தனது 82 வயதில் காலமானார். அவரது சொந்த ஊரான சைஃபாயில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
"வானிலை, மரணம், சந்தை மற்றும் பெண்கள் ஆகியவை குறித்து யாராலும் கணிக்க முடியாது" என்பது முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பிரபலமான வசனம். இது இன்றுவரை முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டு வசனமாக உள்ளது.
ஜுன்ஜுன்வாலா தனது துல்லியமான பங்குச் சந்தை கணிப்புகள் மற்றும் முதலீட்டுத் திறன்களுக்காக முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஒரு ரோல்மாடலாக திகழ்ந்தார்.
இவர் ஆகஸ்ட் 15, 2022 அன்று சிறுநீரகம் தொடர்பான பிரச்னை காரணமாக மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்திரி, செப்டம்பர் 4, 2022 அன்று சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.
அவர் தனது நிறுவனமான சைரஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18.4 சதவீத பங்குகளை வைத்திருந்தார்.
ஜூலை 8, 2022 அன்று ஜப்பானின் நாரா நகரில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளருக்கான பிரச்சார உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்டார்.
அபே ஜப்பானிய வரலாற்றில் நீண்ட காலம் பணியாற்றிய பிரதமராவார்.
இந்துஸ்தானி கிளாசிக்கல் இசையின் ராகங்களுடன் கூடிய காஷ்மீரி வம்சாவளி இசைக்கருவியின் ஒலியை இசைத்த பெருமைக்குரியவர் பண்டிட் ஷிவ்குமார் சர்மா.
சர்மா சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு மே 10, 2022 அன்று 84 வயதில் காலமானார்.
இந்தியாவின் டிஸ்கோ இசை ஜாம்வான் என அறியப்படும் பாலிவுட் இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹரி 2022 பிப்ரவரியில் காலமானார். இந்தி, வங்காளம், குஜராத்தி, தமிழ், கன்னடம் எனப் பல மொழிகளிலும் இவர் இசையமைத்துள்ளார்.
பப்பி லஹரி 1970 முதல் 80 வரையிலான காலக்கட்டத்தில் டிஸ்கோ இசையை இந்தியாவில் பிரபலப் படுத்தினார்.
பஞ்சாபில் பிறந்த 28 வயதான ராப்பர் சித்து மூஸ் வாலா. இவர் மே 29, 2022 அன்று மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே கிராமத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிறந்த பஞ்சாபி கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படும் சித்து, உலகளாவிய இசை மேடையில் பாரம்பரிய பஞ்சாபி கலைஞர்களுக்கான தடத்தை பதித்த பெருமைக்குரியவர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust