சிம்புவுக்கு சொகுசு கார், கௌவுதம் மேனனுக்கு பைக்- சர்ப்ரைஸ் கொடுத்த ஐசரி கணேஷ்

இதற்கிடையில் சிம்பு பட சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் பங்கேற்றது ரசிகர்களுக்கு இன்னும் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.
சிம்பு -  ஐசரி கணேஷ்
சிம்பு - ஐசரி கணேஷ் Twitter

சிம்பு நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசு வழங்கியுள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூலையும் பெற்று வருகிறது.

குறிப்பாக இந்த படத்தில் சிம்புவின் வித்தியாசமான நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அதேபோல் கெளதம் மேனனின் மேக்கிங், ஏஆர் ரஹ்மானின் மியூசிக் என எல்லாமே வெரைட்டியாக ரசிகர்களைக் கொண்டாட வைத்தது.

இதுவரை வெந்து தணிந்தது காடு படம் ரூ.60 கோடி கலெக்‌ஷன் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. சக்சஸ் மீட்டில், சிம்பு, இயக்குநர் கெளதம் மேனன் ஆகியோர் கலந்துகொண்டார்.

சிம்பு -  ஐசரி கணேஷ்
வெந்து தணிந்தது காடு: வென்றதா சிம்பு, GVM, ARR கூட்டணி? படம் எப்படி இருக்கிறது?

இதற்கிடையில் சிம்பு பட சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் பங்கேற்றது ரசிகர்களுக்கு இன்னும் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

வெந்து தணிந்தது காடு படம் வெற்றி பெற்றதால் அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகிழ்ச்சியில் உள்ளார்.

அதை சிறப்பிக்கும் விதமாக படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்ட் பைக்கும், நடிகர் சிம்புவுக்கு சொகுசு கார் ஒன்றையும் ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியுள்ளார்.

சிம்பு -  ஐசரி கணேஷ்
விக்ரம் : டிரண்டாகும் Rolex - கமல் சூர்யாவுக்கு பரிசளித்த இந்த வாட்ச்சில் என்ன ஸ்பெஷல்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com