விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ஹேமா. 90ஸ் கிட்ஸின் ஃபேவரிட்டான தொடர் இது என்பதால், ராகவி கதாபாத்திரத்தில் நடித்த ஹேமாவும் செம பிரபலம். அதன் பிறகு தென்றல் என்னும் சீரியலில் தீபா என்னும் ரோலில் இந்த தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்க முடியாது. இது 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் நடித்தார் ஹேமா. அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் ,மனதில் ஆழமாக பதிந்து விட்ட ஒன்று. இப்போது வரும் சீரியல்களில் எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்பது கிடையாது. `கனா காணும் காலங்கள்’ ராகவி, சங்கவி, `தென்றல்’ துளசி, தீபா, `கோலங்கள்’ அபி போன்ற கதாபாத்திரங்கள் என்றுமே எவர் கிரீன் நினைவுகளாக மனதில் பதிந்து விட்டது.
சீரியல்களில் நடித்து பிரபலமாவதற்கு முன்னரே, திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பரிட்சயமானவர் ஹேமா. குறிப்பாக சூர்யவம்சம் படத்தில் இவரின் பாயாசம் சாப்பிடுங்க பிரண்ட் என்னும் டயலாக் இப்போதுவரை செம வைரல். அந்த ஒரு காட்சியை வைத்து இணையத்தில் ஏராளமான மீம்ஸ்கள் உள்ளன. ஹேமா, ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூமகள் ஊர்வலம், அன்பே அன்பே, உன் வசம், காதல் கொண்டேன், மதுர, ஜி, திமிரு, அடைக்கலம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு ராதிகாவின் சித்தி என்ற சீரியலில் பேபி காவேரி கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர், கனா காணும் காலங்கள், மகள், அன்பே வா, தென்றல், முந்தானை முடிச்சு போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார். முந்தானை முடிச்சு சீரியலுக்கு பிறகு திடீரென மீடியா வெளிச்சத்தில் இருந்து முற்றிலும் தன்னை மறைத்துக் கொண்டார் ஹேமா. எந்த சீரியலிலும் கமிட் ஆகவில்லை. அவரின் போன் நம்பரை மாற்றி விட்டார். என்ன ஆனது என்று அவரின் சின்னத்திரை நண்பர்களுக்கு கூட தெரியவில்லை. தற்போது கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாவில் ஆக்டிவாக போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதிகமாக மேக் அப், ஆடம்பர ஆடைகள் என வழக்கமான சீரியல் நாயகிகளை போன்று இல்லாமல், எளிமையான தோற்றத்தில் இருக்கிறார் ஹேமா. அவரிடம் ரசிகர்கள் கமெண்டில் கேட்கும் கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளிக்கிறார். சீக்கிரமே சீரியலில் கம்பேக் கொடுக்க போவதாக குறிப்பிட்டிருக்கிறார். அவரின் மகளையும் இன்ஸ்டா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, என் குடும்ப புகைப்படத்தை விரைவில் பகிர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் ஹேமா.
தென்றல் சீரியலுக்கு பிறகு ஏன் எந்த சீரியலிலும் ஹேமா கமிட் ஆகவில்லை என்பது குறித்து இப்போது வரை பல வதந்திகள் உலா வருகின்றன. ஹேமா வீட்டில் பிரச்சனை, விஜய் டிவி நடிகருக்கும் அவருக்கும் பஞ்சாயத்து, பொருளாதார பிரச்சனை என பல வதந்திகள் தற்போதுவரை பகிரப்பட்டு வருகிறது. ஹேமா மீண்டும் சீரியலுக்கு நடிக்க வருகிறேன் என்று ரசிகர்களிடம் சொன்னாலும் சின்னத்திரையில் இருந்து விலகியே இருக்கிறார். தன் இன்ஸ்டா பக்கத்தில் வெகு சிலரை மட்டுமே ஃபாலோ செய்கிறார். தன் தோழி ஏகவள்ளி, நடிகை சந்தோஷி, ஜீ தமிழ், சன் டிவி ஆகிய நான்கு இன்ஸ்டா பக்கங்களை மட்டும் தான் பின் தொடர்கிறார். ``நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும். ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது’’ என்பது தான் ஹேமாவின் லேட்டஸ்ட் போஸ்ட். அவருக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைத்து மீண்டும் ஒரு கம்பேக் கொடுக்க வாழ்த்துக்கள்.